நடிகர் விஷாலுக்கு பலத்த காயம்?

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு துருக்கியில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. இந்த புதிய படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். துருக்கியில் உள்ள கேப்படோசியாவின் மலைப்பகுதியில் சண்டை காட்சி படமாக்கபடும் போது பைக்கில் இருந்து விழுந்த விஷால் பலத்த காயம் அடைந்தார். விஷாலின் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன் காரணமாக படபிடிப்பு ரத்து செய்யபட்டு உள்ளது.