விரைவில் பிரச்சாரத்தில் கலந்துகொள்வேன்_ விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். அமெரிக்கா சென்று மேல் சிகிச்சை பெற்று திரும்பினார்.

மருத்துவர்களின் அறிவுரைபடி தேர்தல் பிரச்சார கூட்டங்களில் இதுவரை கலந்து கொள்ளமால் இருந்த விஜயகாந்த் தற்போது டிவிட்டரில் வீடியோ பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் என் உடல்நிலை நலமாக உள்ளது. விரைவில் பிரச்சாரங்களில் கலந்து கொள்வேன்.தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி என்றுதான் அர்த்தம். மோடி நல்லவர், அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என கூறியுள்ளார்.

விஜயகாந்தை சந்தித்த டி. ராஜேந்தர்

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்த நடிகர் டி. ராஜேந்தர் தனது மகன் குறலரசனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.