நன்றி தெரிவிக்கும் டிடிவி தினகரன் அவர்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் 59 வேட்பாளர்களுக்கும் “பரிசுப்பெட்டி” சின்னத்தை ஒதுக்கிய இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் என கூறியுள்ளார்.

அமமுகவிற்கு பொது சின்னம் ஒதுக்கீடு?

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம் பொது சின்னம் வழங்க கூறி தேர்தல் ஆணையத்திடம்  உத்தரவிட்டது. இதனை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தரப்பில் பொது சின்னம் வழங்க கூறி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அமமுகவிற்கு பரிசுபெட்டி… Continue reading அமமுகவிற்கு பொது சின்னம் ஒதுக்கீடு?

டிடிவி தினகரன் அவர்கள் கடும் சாடல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருவள்ளுரில் நேற்று பிரச்சாரம் செய்த தினகரன் அவர்கள் தேர்தலில் சின்னம் முக்கியம் அல்ல, மக்களின் எண்ணம் தான் முக்கியம் எந்த சின்னம் கொடுத்தாலும் தமிழக மக்கள் அமமுகவை ஜெயிக்க வைப்பார்கள் என்று தெரிவித்து உள்ளார். மேலும் அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் 80 சதவீத இளைஞர்கள் உள்ளனர். அப்படி இருந்தும் அமமுகவை சுயேட்சை என்று கூறி… Continue reading டிடிவி தினகரன் அவர்கள் கடும் சாடல்

டிடிவி தினகரன் அவர்களின் வேண்டுகோள்?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதில் ஆடம்பர வரவேற்பு வேண்டாம் ,உங்கள் அன்பு ஒன்றே போதும்! பொன்னாடை, பூங்கொத்து, பட்டாசுகள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் தோரணக் கொடிகளைத் தவிர்த்திடுங்கள்! தேர்தல் களத்தில் மட்டுமே முழுக்கவனமும் இருக்கட்டும்! போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மக்களின்  இயல்பு வாழ்க்கைக்கு எந்தத்தொல்லையும் ஏற்படக்கூடாது, பட்டாசுகள்,வாகனங்கள் போன்றவை நம் வேட்பாளரின் செலவுக்கணக்கில் சேரும் என்பதை மறந்துவிடக்கூடாது.… Continue reading டிடிவி தினகரன் அவர்களின் வேண்டுகோள்?

தீவிர பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் அவர்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நேற்று கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் மக்களவை தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். டிடிவி தினகரன் அவர்கள் பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் மக்கள் அதிக அளவில் பங்குபெற்று தங்கள் ஆதரவினை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்க்கு அளித்தனர்.

எந்த வித பின்னடைவும் இல்லை – டிடிவி தினகரன்

சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் குக்கர் சின்னம் கிடைக்காவிட்டாலும் தேர்தல் ஆணையம் கொடுக்கும் சின்னத்தில் வெற்றி பெறுவோம். குக்கர் சின்னம் ஒதுக்கபடாததால் எந்த வித பின்னடைவும் இல்லை என கூறினார். மேலும் அவர் தேனி தொகுதியில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமார் அவரது வேட்புமனுவில் தனக்கு மூன்று கோடி ரூபாய் கடன் இருப்பதாக தெரிவித்து இருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.