செல்ஃபி எடுத்தால் மரண தண்டனை?

தாய்லாந்தில் உள்ள மாய் காவோ கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள விமான நிலையத்தில் இருந்து பறக்க துவங்கும் விமானங்களுடன்  செல்ஃபி எடுப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.விமானத்தின் என்ஜினில் இருந்து வெளிவரும் அதிவேக காற்றில் தூக்கி வீசப்பட்டு சிலர் உயிர் இழக்கும் சம்பவம் தற்போது வாடிக்கையாகி விட்டது. இதனால் விமானம் நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் அதிகபட்சமாக மரணதண்டனை அளிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை செய்து உள்ளது.