மு க ஸ்டாலின் அழைப்பு!

வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ‘#CAA2019 எதிர்ப்பு பேரணி’யில் கட்சி, மதம், சாதி, மாநில எல்லைகளைக் கடந்து அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்து  மு க  ஸ்டாலின்  தனது ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

 

பானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு உண்டா?

இந்திய பெருங்கடல் மற்றும் வங்க கடல் பகுதியில் உருவான காற்று அழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெற்று மத்திய இந்திய பெருக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய தெற்கு வங்க கடல் பகுதி நோக்கி நகரும் எனவும் பானி புயல் தமிழகத்தை நெருங்கி வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு மழை வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்து உள்ளார். மேலும் புயல் உருவாவது குறித்து நாளை தான் உறுதியாக தெரியும் எனவும் பானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது எனவும் செல்வகுமார் தெரிவித்து உள்ளார்.

தமிழ் நேரலையின் பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள்

மக்களவை தேர்தல் ஆனது தமிழ்நாட்டில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணபட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் தமிழ் நேரலை நாளிதழ் நடத்திய பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள் விவரம்

1.தென் சென்னை

விருகம்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, தி நகர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 19,36,209 ஆகும்.
சுமதி தங்கபாண்டியன் (திமுக) -49%
ஜெய வர்தன் (அதிமுக)               -40%
இசக்கி சுப்பையா (அமமுக)       -09%

2.மத்திய சென்னை

வில்லிவாக்கம், சேப்பாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, துறைமுகம், அண்ணாநகர்  சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,16,603 ஆகும்.

தயாநிதிமாறன் (திமுக)           -51%
சாம்பால் (பாமக)                        -40%
தெஹலான் பகாவி (அமமுக)-07%

3.வடசென்னை

திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர்,ராயபுரம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை14,68,523 ஆகும்.

கலாநிதி வீராசாமி(திமுக)        -54%
மோகன்ராஜ் (தேமுதிக)            -30%
சந்தானகிருஷ்ணன்(அமமுக) -14%

4.திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, பொன்னேரி, ஆவடி,திருவள்ளூர், மாதவரம்  சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 19,20,372 ஆகும்.
ஜெயகுமார்(காங்கிரஸ்)     -35%
வேணு கோபால்(அதிமுக)-50%
பொன் ராஜா(அமமுக)        -13%

5.காஞ்சிபுரம்

செங்கல்பட்டு,மதுராந்தகம், திருப்போரூர்,உத்திரமேரூர், செய்யூர், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 16,19,318 ஆகும்.

செல்வம்(திமுக)                         -51%
மரகதம் குமரவேல்(அதிமுக)  -37%
முனுசாமி(அமமுக)                   -10%

6.ஸ்ரீபெரும்புதூர்

மதுரவாயல்,ஸ்ரீபெரும்புதூர் , அம்பத்தூர், பல்லாவரம், ஆலந்தூர், தாம்பரம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 22,10,851 ஆகும்.

டி.ஆர். பாலு(திமுக)       -52%
வைத்திலிங்கம்(பாமக)  -36%
நாராயணன்(அமமுக)    -10%

7.அரக்கோணம்

திருத்தணி, ராணிப்பேட்டை, அரக்கோணம், ஆற்காடு, சோளிங்கர், செய்யார் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,79,961 ஆகும்.

ஜெகத்ரட்சகன்(திமுக)-50%
மூர்த்தி(பாமக)              -40%
பார்த்திபன்(அமமுக)   -08%

8.கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை, வேப்பனபள்ளி, பர்கூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தளி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,10,085 ஆகும்.

செல்வகுமார் (காங்கிரஸ்) -42%
முனுசாமி(அதிமுக)            -50%
கணேச குமார்(அமமுக)     -06%

9.திருவண்ணாமலை

ஜோலார்பேட்டை,திருவண்ணாமலை,திருப்பத்தூர், கீழ்பெனத்தூர், செங்கம்,கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,54,657 ஆகும்.

அண்ணாதுரை(திமுக)         -48%
கிருஷ்ணமூர்த்தி(அதிமுக) -43%
ஞானசேகர்(அமமுக)            -08%

10.ஆரணி

போரூர்,வந்தவாசி,ஆரணி,செஞ்சி,செய்யார்,மயிலம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,34,313ஆகும்.

விஷ்ணு பிரசாதி(காங்கிரஸ்)-48%

ஏழுமலை(அதிமுக)                 -40%

செந்தமிழன்(அமமுக)             -10%

11.வேலூர்

வேலூர் ,குடியாத்தம், அணைக்கட்டு, வாணியம்பாடி ,கே வி குப்பம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,07,817 ஆகும்.

கதிர் ஆனந்த் (திமுக)          -50%

சண்முகம்(புதிய நீதி கட்சி)-41%

பாண்டுரங்கன்(அமமுக)    -07%

12.தர்மபுரி

பாலக்காடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், ஹரூர், தர்மபுரி, மேட்டூர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,67,904 ஆகும்.

செந்தில்குமார்(திமுக)             -35%

அன்புமணி ராமதாஸ்(பாமக) -33%

பழனியப்பன்(அமமுக)            -30%

 

13.சேலம்

ஓமலூர், சேலம் வடக்கு, சேலம் தெற்கு, எடப்பாடி, சேலம் மேற்கு, வீரபாண்டி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,92,487 ஆகும்.

பார்த்திபன்(திமுக) -40%

சரவணன்(அதிமுக)-48%

செல்வம்(அமமுக) -10%

14.நாமக்கல்
சங்கரி, நாமக்கல், ராசிபுரம், பரமத்தி வேலூர், சேந்தமங்கலம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,98,365 ஆகும்.

சின்ராஜ் (கொதேமுக) -43%

காளியப்பன்(அதிமுக)-47%

சாமிநாதன்(அமமுக)  -08%

15.கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம், சங்கராபுரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, ஏற்காடு, கங்காவள்ளி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,11,972 ஆகும்.

கௌதம் சிகாமணி(திமுக)      -50%

சுதீஷ் (தேமுதிக)                        – 39%

கோமுகி மணியன்(அமமுக)  -09%

16.விழுப்புரம்

திண்டிவனம், விக்கிரவாண்டி,வனுர், விழுப்புரம் ,திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,27,874 ஆகும்.

ரவிகுமார்(திமுக)                 -50%

வடிவில் ராவணன(பாமக) -41%

கணபதி(அமமுக)                 -07%

 

17.நீலகிரி

பவானி சங்கர், குன்னூர், உதகமண்டலம், குடலூர், மேட்டுப்பாளையம்,அவினாசி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,49,740 ஆகும்.

ராசா(திமுக)                    -51%

தியாகராஜன்(அதிமுக) -37%

ராமசாமி(அமமுக)         -09%

18.கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் வடக்கு, சூலூர், கோயம்புத்தூர் தெற்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், பல்லடம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 19,31,558 ஆகும்.

நடராஜன்(மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)-42%

ராதாகிருஷ்ணன்(பிஜேபி)                  -45%

அப்பாத்துரை(அமமுக)                       -11%

19.ஈரோடு

குமாரபாளையம், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, தாராபுரம், ஈரோடு மேற்கு, காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,44,044 ஆகும்.

கணேசமூர்த்தி(மதிமுக)-48%

மணிமாறன்(அதிமுக)    -40%

செந்தில்குமார்(அமமுக)- 11%

20.திருப்பூர்

பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், திருப்பூர் வடக்கு, அந்தியூர், திருப்பூர் தெற்கு,பவானி  சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,11,643ஆகும்.

சுப்பராயன்(இந்திய கம்யூனிஸ்ட்)-42%

அனந்தன்  (அதிமுக)                        -50%

செல்வம்(அமமுக)                           -06%

21.கரூர்

வேடசந்தூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, மணப்பாறை, கரூர், வில்லிமலை சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,65,802ஆகும்.

ஜோதிமணி(காங்கிரஸ்)-48%

தம்பிதுரை (அதிமுக)     -42%

தங்கவேல்(அமமுக)      -08%

22.திருச்சி

ஸ்ரீரங்கம், திருவெரும்பூர், திருச்சி மேற்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை,திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,89,267 ஆகும்.

திருநாவுக்கரசர்(காங்கிரஸ்)                    -37%

இளங்கோவன்(தேமுதிக)                        -13%

சாருபாலா தொண்டைமான்(அமமுக) -46%

23.பொள்ளாச்சி

தொண்டாமுத்தூர், வால பாலை, கிணத்துக்கடவு, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,00,569 ஆகும்.

சண்முகசுந்தரம்(திமுக)- 51%

மகேந்திரன் (அதிமுக)    -40%

முத்துக்குமார்(அமமுக)-07%

24.திண்டுக்கல்

பழனி, நிலக்கோட்டை, ஒட்டச்சத்திரம், நத்தம், திண்டுக்கல்,ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,18,385 ஆகும்.

வேலு சாமி(திமுக)           -50%

ஜோதி (பாமக)                    -38%

ஜோதிமுருகன்(அமமுக)-10%

25.சிதம்பரம்

குன்னம், புவனகிரி, அரியலூர், சிதம்பரம், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,59,735 ஆகும்.

திருமாவளவன்(விடுதலை சிறுத்தைகள்)-51%

சந்திரசேகர் (அதிமுக)                                    -42%

இளவரசன்(அமமுக)                                      -06%

26.மயிலாடுதுறை

சீர்காழி, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, கும்பகோணம், பூம்புகார், பாபநாசம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,66,810 ஆகும்.

ராமலிங்கம் (திமுக)     -45%

ஆசை மணி (அதிமுக) -33%

செந்தமிழன்(அமமுக) -20%

27.பெரம்பலூர்

குளித்தலை, முசிறி, லால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,76,499 ஆகும்.

பச்சமுத்து (பாரிவேந்தர்) (திமுக)-51%

சிவபதி(அதிமுக)                             -40%

ராஜசேகரன்(அமமுக)                    -07%

28.கடலூர்

திட்டக்குடி, பண்ருட்டி, விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,76,499 ஆகும்.

ரமேஷ் (திமுக)             -50%

கோவிந்தசாமி(பாமக) -40%

கார்த்திக்(அமமுக)        -08%

29.நாகப்பட்டினம்

நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, கீழ்வேளூர், திருவாரூர், வேதாரண்யம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 12,92,658 ஆகும்.

செல்வராசு(மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)-46%

சரவணன்(அதிமுக)                                – 37%

செங்கோடி(அமமுக)                              -15%

30.தஞ்சாவூர்

தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,43,378 ஆகும்.

பழனிமாணிக்கம்(திமுக)                    -51%

நடராஜன்(தமிழ் மாநில காங்கிரஸ்)-40%

முருகேசன் (அமமுக)                         -07%

31. மதுரை

மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மத்திய மதுரை, மேலூர், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,20,728 ஆகும்.

வெங்கடேசன்(மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) -40%

ராஜ்சத்யன்(அதிமுக)                                    -30%

டேவிட் அண்ணாதுரை(அமமுக)              – 27%

32.சிவகங்கை

திருமயம், திருப்பத்தூர், ஆலங்குடி, சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,29,698 ஆகும்.

கார்த்தி சிதம்பரம்(காங்கிரஸ்)-48%

H.ராஜா(பிஜேபி)                          -30%

பாண்டி(அமமுக)                       -20%

33.தேனி

சோழவந்தான், பெரியகுளம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர், கம்பம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,32,240 ஆகும்.

இளங்கோவன்(காங்கிரஸ்)          -45%

ரவீந்திரநாத் குமார்(அதிமுக)      -30%

தங்க தமிழ்ச்செல்வன்(அமமுக)-23%

34.விருதுநகர்

திருப்பரங்குன்றம், சிவகாசி, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,59,316 ஆகும்.

மாணிக் தாகூர்(காங்கிரஸ்)-42%

அழகர்சாமி(தேமுதிக)         -39%

பரமசிவ ஐயப்பன்(அமமுக)-17%

35. தூத்துக்குடி

விளாத்திகுளம் ,ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,02,300 ஆகும்.
கனிமொழி(திமுக)                             -49%

தமிழிசை சௌந்தராஜன்(பிஜேபி) -33%

புவனேஸ்வரன்(அமமுக)               – 15%

36.ராமநாதபுரம்

அறந்தாங்கி, திருவடனை, ராமநாதபுரம், திருச்சுழி, பரமக்குடி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,52,761 ஆகும்.

நவாஸ் கனி(முஸ்லிம் லீக்)   -41%

நயினார் நாகேந்திரன்(பிஜேபி) -37%

ஆனந்த்(அமமுக)                        -20%

37.திருநெல்வேலி

ஆலங்குளம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, நாங்குநேரி, அம்பா சமுத்திரம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,26,640 ஆகும்.

ஞானதிரவியம்(திமுக)                         -45%

பால் மனோஜ் பாண்டியன்(அதிமுக) -38%

மைக்கேல் ராயப்பன்(அமமுக)           -15%

38.கன்னியாகுமரி

கன்னியாகுமரி, பத்மநாபபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, கிள்ளியூர்,கொளச்சல் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,77,161 ஆகும்.

வசந்தகுமார்(காங்கிரஸ்)                -47%

பொன் ராதாகிருஷ்ணன்(பிஜேபி) -43%

லட்சுமணன்(அமமுக)                    -08%

39.தென்காசி

ராஜபாளையம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,72,674 ஆகும்.

தனுஷ் குமார்(திமுக)                 -44%

கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்)-38%

பொன்னுத்தாய்(அமமுக)          -15%

40.புதுச்சேரி

வைத்திலிங்கம் (காங்கிரஸ்)-46%

ரெங்கசாமி  (NR காங்கிரஸ்)    -40%

தமிழ்மாறன்(அமமுக)           -06%

 

 

 

 

 

மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல்

அரவக்குறச்சி,திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே 19 ஆம் தேதி சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த மாதம் 22 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் வேட்பு மனுக்கள் ஏப்ரல் 30 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கபட்டு உள்ளது. மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

மாற்றம் ஏற்படுத்த போகும் முக்கிய தொகுதிகள் சிறப்பு கட்டுரை

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஆனது மே மாதம் 23 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் நாட்டில் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, தூத்துக்குடி, தேனி, திருச்சி ஆகிய முக்கிய தொகுதிகளின் கள நிலவரம் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

தென் சென்னை

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியானது தியாகராய நகர்,விருகம்பாக்கம், மயிலாப்பூர்,சைதாப்பேட்டை, வேளச்சேரி,சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சட்டமன்ற தொதிகளை உள்ளடக்கியது ஆகும். கடந்த காலங்களில் திமுகவின் கோட்டையாக விளங்கிய தென் சென்னை கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் கைவசம் வந்தது.

1996 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நான்கு முறை த. இரா. பாலு அவர்கள் திமுகவின் சார்பில் வெற்றி பெற்றார். இதுவரை தென் சென்னையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்று உள்ளன. ஆரம்ப காலங்களில் திமுகவின் கோட்டையாக இந்த தொகுதி விளங்கினாலும் கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று உள்ளது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் சி. ராஜேந்திரன் 3,08,567 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட பாரதி 2,75,632 வாக்குகள் பெற்றார்.2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் 4,38,404 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் டி கே எஸ் இளங்கோவன் 3,01,776 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

 

கடந்த முறை தென் சென்னையில் மக்களவை உறுப்பினராக செயல்பட்ட ஜெயவர்தன் இந்த முறையும் அதிமுகவின் சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுகவின் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் என அழைக்கபடும் த. சுமதி போட்டியிடுகிறார். இவர் முன்னாள் வணிகத்துறை அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் ஆவார். முன்னாள்  பள்ளி கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இவருக்கு தம்பி ஆவார்.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் மதுரையில் உள்ள மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றார். இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று உள்ளார்.

இவருக்கும் ஜெயவர்த்தனுக்கும்  இடையில் தென் சென்னையில் நேரடியான போட்டி காணபடுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னையில் வெற்றி பெற்றது ஜெயவர்தனின் பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் ஓட்டு வங்கி தென் சென்னையில் கணிசமான அளவிற்கு உயர்ந்து இருப்பது திமுகவினர் இடையே நம்பிக்கையை அதிகரிக்க செய்து உள்ளது. எது எப்படியாக இருந்தாலும் அதிமுக மற்றும் திமுக இடையில் இந்த முறை தென் சென்னையில் கடுமையான போட்டி நிலவும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.

மத்திய சென்னை

மத்திய சென்னையின் திமுக வேட்பாளராக மீண்டும் நிறுத்தபட்டு உள்ளார் தயாநிதி மாறன் அவர்கள். இதற்கு முன் மூன்று முறை மத்திய சென்னையில் போட்டியிட்டு உள்ள தயாநிதி மாறன் அவர்கள் இரண்டு முறை வெற்றியும் ஒரு முறை தோல்வியும் அடைந்து உள்ளார். தயாநிதி மாறன் லயோலா கல்லூரியில் பொருளாதார பட்டம் பெற்று உள்ளார்.

2004 ஆம் ஆண்டில் முதல் முறையாக மத்திய சென்னையில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 61.68 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த பாலகங்கா 35.52 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றார்.2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 46.82 சதவீத வாக்குகள் பெற்று மத்திய சென்னையில் மீண்டும் வெற்றி பெற்றார் தயாநிதி மாறன். இவரை எதிர்த்து போட்டியிட்ட முஹமது அலி ஜின்னத் 41.34 சதவீத வாக்குகள் பெற்றார்.

 

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்து திமுக வேட்பாளர்களும் தோல்வி அடைந்த நிலையில் இவராவது வெற்றி பெறுவாரா என திமுக தொண்டர்கள் எதிர்பார்த்த போது இவரும் தோற்று போனது  ஒரு கதை. சதவீதபடி திமுகவின் ஒட்டுவங்கி மத்திய சென்னையில் குறைந்து வருவது கூர்ந்து கவனிக்கதக்கது. ஆனால் அனைத்து பலமும் உள்ளதால் தயாநிதிமாறன் இந்த தடவை கண்டிப்பாக வெற்றி பெறுவார் என அவரது கட்சியினர் நம்புகின்றனர்.

இந்த முறை அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு  மத்திய சென்னை ஒதுக்கபட்டு உள்ளது. மத்திய சென்னையில் பாமகவின் வேட்பாளராக சாம்பால் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாமகவின் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ஆவார். சென்ற முறை திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதியதால் பரபரப்பாக மத்திய சென்னை காணப்பட்டது. ஆனால் இந்த தடவை திமுகவை எதிர்த்து பாமக போட்டி இடுவதால் எந்த அளவிற்கு போட்டி இருக்கும் என சொல்ல இயலவில்லை.

 

தொகுதி முழுவதும் தெரிந்த முகம், கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம், பல வருடங்களாக தொகுதியை வலம் வந்து கொண்டிருப்பது, தொகுதியின் அனைத்து பகுதிகளும் அத்துபடி போன்றவை தயாநிதி மாறனின் பலங்களாக பார்க்கப்படுகிறது.ஆரம்பத்தில் இருந்த ஓட்டு சதவீதம் படிப்படியாக குறைந்து வருவது பலவீனமாக பார்க்கப்படுகிறது.

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய , அதாவது வசதியானவர்கள், நடுத்தரவர்க்கம்,படித்தவர்கள், ஏழை எளியவர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய தொகுதி மத்திய சென்னை ஆகும். மாநிலத்தின் தலைநகரமான சென்னையின் மையப்பகுதியில் இந்த தொகுதி அமைந்து உள்ளதால் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து உள்ளது. தற்போதைய தேர்தல் வெப்பத்தில் அனைவரும் வேலையை தொடங்கி விட்டனர். ஆனால் வரும் நாட்களில் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என தெரிகிறது.

வடசென்னை

வடசென்னை மக்களவை தொகுதியானது திருவொற்றியூர்,ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர் மற்றும் இராயபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதுவரை நடந்த 16 மக்களவை தொகுதிகளில் 10 முறை திராவிட முன்னேற்ற கழகம் இந்த தொகுதியை கைபற்றி உள்ளது. அதே நேரத்தில் அதிமுக கட்சி ஆனது கடந்த மக்களவை தேர்தலில் ஒரே ஒரு முறை மட்டும் வட சென்னை மக்களவைத் தொகுதியை கைபற்றி உள்ளது.

2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுகவை சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன் 2,81,055 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ கட்சியை சேர்ந்த தா. பாண்டியன் 2,61,902  வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த வெங்கடேஷ் பாபு 4,06,704 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த ஆர். கிரிராஜன் 3,07000 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்த முறை நடைபெறும் தேர்தலில் திமுகவின் சார்பில் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் அவர்கள் கலாநிதி வீராசாமியை எதிர்த்து போட்டியிடுகிறார். வடசென்னை தொகுதியை பொறுத்த வரை தேமுதிக விட திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக காணப்படுகிறது.

தூத்துக்குடி

தமிழ்நாட்டில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன் என இரு பெரும் புள்ளிகள் களத்தில் இறங்கி உள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே நேரடியான போட்டி இந்த தொகுதியில் காணப்படுகிறது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியானது விளாத்திகுளம்,திருச்செந்தூர்,தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 69.13 சதவீத வாக்குபதிவும், 2014  ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 69.92 சதவீத வாக்குபதிவும் நடைபெற்றது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் ஜெயதுரை 76649 வாக்குகள் வித்தியாத்தில்  வெற்றி பெற்று மக்களவை தொகுதியின் உறுப்பினர் ஆனார். இந்த தேர்தலில் ஜெயதுரை 3,11,017 வாக்குகளும், இவரை எதிர்த்து நின்ற அதிமுகவை சிந்தியாபாண்டியன் 2,34,368 வாக்குகளும் பெற்றனர்.

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஜெயசிங் ஜெயராஜ் 3,66,052 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ஜெகன் 2,42,050 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் மதிமுகவின் சார்பில் போட்டியிட்ட ஜோயல் 1,82,191 வாக்குகள் பெற்றார்.

இந்த முறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இவர் எத்திராஜ் கல்லூரியில் வணிகவியல் முதுகலை பட்டம் பெற்று உள்ளார்.2007 ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர் 2013 ஆம் ஆண்டு வரை பதவி வகித்து உள்ளார். கனிமொழி அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக தூத்துக்குடியில் கடுமையான கள பணி ஆற்றி வருகிறார்.கனிமொழியை எதிர்த்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களத்தில் இறங்கி உள்ளார். தமிழிசையும் அவரது கணவர் சவுந்தரராஜனும் தொழில்முறை மருத்துவர்கள் ஆவார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் மற்றும் அதன் விளைவாக நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஆகியவை இத்தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதே நேரத்தில் இந்த வழக்கில் வாதாடி வெற்றி பெற்ற வைகோ அவர்கள் திமுகவின் பக்கம் நிற்பது அவர்களின் பலத்தை மேலும் அதிகரிக்க செய்கிறது.

PTI9_27_2018_000076B

சென்ற முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் மதிமுகவில் போட்டியிட்டு 1,82,191 வாக்குகள் பெற்ற ஜோயல் திமுகவில் இணைந்து செயலாற்றி வருகிறார். கடந்த தேர்தலில் ஏழு சதவீத வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சியும் இந்த முறை திமுக கூட்டணியில் இருப்பது கூடுதல் பலமாகும். திமுகவில் உள்ள அனிதா ராதாகிருஷ்ணனும், கீதா ஜீவனும் தூத்துக்குடி பகுதிகளில் மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்கின்றனர்.

இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் வெற்றி  கிட்டத்தட்ட உறுதியான ஒன்றுதான். தமிழிசை சவுந்தரராஜனின் வருகை கனிமொழிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த போவது இல்லை. வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்பதே தற்போதைய நிலவரம்.

தேனி

தேனி மக்களவை தொகுதியானது சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி நாயக்கனூர், கம்பம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்த தொகுதியில் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆரூன் ரசீத் 6302 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.ஆரூன் ரசீத் 3,40,575 வாக்குகளும், அதிமுகவை சேர்ந்த 3,34,273 வாக்குகளும் பெற்றனர்.

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ரா. பார்த்திபன் 5,71,254 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த பொன். முத்து ராமலிங்கம் 2,56,722  வாக்குகள் பெற்றார்.

இந்த முறை நடைபெற இருக்கும் தேர்தலுக்கு  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தங்க தமிழ்செல்வனும், அதிமுக சார்பில் ரவீந்திரநாத்ம், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஸ் இளங்கோவனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். தேனி தொகுதியில் மும்முனை போட்டி காணப்பட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கையே சற்று ஓங்கி நிற்பது போல் தெரிகிறது.

இந்த தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை  மக்களவை உறுப்பினராக செயல்பட்டதும் கூடுதல் பலத்தை தருகிறது.

தங்க தமிழ்செல்வனும் தேனி பகுதியில் மக்கள் செல்வாக்கு  மிக்கவர் ஆவார். அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆன தங்க தமிழ்செல்வன் கட்சியின் தேனி மாவட்ட கழக செயலாளர்  ஆகவும் இருந்து வருகிறார். தினகரன் அவர்களின் சொந்த தொகுதியாக தேனி விளங்குவதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

திருச்சி

திருச்சி மக்களவை தொகுதியானது தொகுதி மறுசீரமைப்பு பணிக்கு பிறகு ஸ்ரீரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அடைக்கலராஜ் நீண்ட வருடங்களாக எம்பியாக பதவி வகித்தது இந்த தொகுதியில்தான். இவர் 1984 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நான்கு மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார். கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாண சுந்தரமும் இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்று உள்ளார். கடைசியாக நடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும் அதிமுக ஆனது இந்த தொகுதியை கைபற்றி உள்ளது.

2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பி. குமார் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சாருபாலா தொண்டைமானை விட 4335 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பி. குமார் 2,98,710 வாக்குகளும்,சாருபாலா தொண்டைமான் 2,94,375 வாக்குகளும் பெற்றனர்.2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ப.குமார் 4,58,478 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த அன்பழகன் 3,08,002 வாக்குகள் பெற்றார்.  திருச்சி தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசுரும், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் டாக்டர் இளங்கோவனும் அமமுக சார்பில் சாருபாலா தொண்டைமானும் போட்டியிடுகின்றனர்.

மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆனந்த ராஜா என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் வினோத் ராம் என்பவரும் போட்டியிடுகின்றனர். திருச்சி மக்களவை தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் திருச்சி மேற்கு,புதுக்கோட்டை, திருவெறும்பூர் ஆகி தொகுதிகள் திமுக வசமும், திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம்,கந்தர்வகோட்டை ஆகி தொகுதிகள் அதிமுக வசமும் உள்ளன.

திருச்சியில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளதால் தொழிலாளர்கள் கணிசமான அளவில் உள்ளனர். இடதுசாரி கட்சிகளுக்கும் திருச்சி தொகுதியில் குறிப்பிடத்தகுந்த வாக்கு வங்கி உள்ளது. தற்போது அமமுக சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டைமான் ஏற்கனவே இரண்டு முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உடையவர்.2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நூலிழையில் வெற்றியை தவறவிட்டார். இந்த முறை நடைபெறும் தேர்தலில் அமமுகவில் போட்டியிடும் சாருபாலா தொண்டைமானுக்கும், காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசுருக்கும் கடுமையான போட்டி நிலவும் என தெரிகிறது.

 

டாஸ்மாக் கடைகள் மூடல்?

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆனது ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 16,17,18 ஆம் தேதிகளில் மதுபான கடைகளை மூட கூறி டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் உத்தரவு இட்டு உள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட கூறி உத்தரவு இடபட்டு உள்ளது.