இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் நேற்று அடுத்து அடுத்தாக 8 இடங்களில் நடந்த குன்டு வெடிப்புகளில் 290 பேர் பலியாகி உள்ளனர்.500 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.இந்நிலையில்  இலங்கையில் மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து இலங்கையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு

நேற்று காலை இலங்கையின் கொழும்புவில் உள்ள தேவாலயங்கள்,ஹோட்டல்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்து உள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.500 க்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த குண்டுவெடிப்புகளில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 6 ஆகவும் அதிகரித்து உள்ளது. நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டப்பட்ட முக்கிய தேவாலயங்களில் இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த குண்டுவெடிப்பு காரணமாக 24 பேர் கைது செய்யபட்டு உள்ளதாக… Continue reading இலங்கை குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு