ஹாக்கியில் இந்திய அணி வெற்றி

அஸ்லான் ஷா ஹாக்கி போட்டிகள் ஆனது மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் 4_2 கோல் கணக்கில் இந்திய அணி மலேசியாவை வென்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் சுமித், சுமித் குமார், வருன் குமார், மன்தீப் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். மலேசிய அணி தரப்பில் ராஷி ரஹீம் மற்றும் முகமது பிர்ஹான் ஆகியோர் கோல் அடித்தனர். இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி கனடா அணியை எதிர்கொள்கிறது.