நடிகர்கள் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணையும் அடுத்த படத்தை புதுமுக இயக்குனர் நார்தன் இயக்க உள்ளார். இவர் பிரபல இயக்குனர் பிரசாந்த் நீலிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். நவின் குமார் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. நடிகர் சிம்பு வெங்கட் பிரபுவின் மாநாடு திரைபடத்தில் நடித்து முடித்ததும் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜூன் மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.