அரையிறுதியில் ரோஜர் பெடரர்

அமெரிக்காவில் நடந்து வரும் சர்வதேச மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வீரர் கெவின் ஆண்டர்சனை 6_0,6_4 என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் பெடரர் வென்றார்.