ரஜினியின் தர்பார்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட பட்டு உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்திற்க்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படம் 2020 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

ரஜினிக்கு ஜோடி நயன்தாராவா?

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க கூடும் என கூறப்பட்டு வந்த வேளையில் தற்போது படகுழுவினர்  நயன்தாராவை ரஜினிக்கு ஜோடியாக தேர்வு செய்து உள்ளனர்.