பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் ராகுல் காந்தி

பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை அடைக்கப்பட்ட அறையில் தயாரிக்கப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அந்த அறிக்கை தனிமைபடுத்தபட்ட ஒற்றை மனிதனின் குரல் என்றும் குறுகிய கண்ணோட்டம் கொண்ட அகந்தையான ஒன்று என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அறிவார்ந்ததும் ஆற்றல் மிக்கதும் ஆகும் எனவும் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்கள் மனநிலையின் பிரதிபலிப்பே எனவும் கூறியுள்ளார்.

ராகுல் வயநாட்டில் வேட்புமனு தாக்கல்

வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில்  ராகுல் காந்தி அமேதியுடன், கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இன்று வயநாட்டில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக கோழிகூட்டில் இருந்து கல்பெட்டா நகருக்கு ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி செல்ல உள்ளார். பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் சென்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். கேரளாவில் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

பத்திரிக்கையாளருக்கு உதவிய ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் டெல்லி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு சென்று கொண்டு இருந்தபோது   இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த பத்திரிக்கையாளர் ரஜிந்தர் வியாஸ் என்பவர் காயம் அடைந்தார். இதனை பார்த்த ராகுல் காயமடைந்த பத்திரிக்கையாளரை தனது காரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ராகுல் காந்தி அவர்களின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.  

பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி

A-SAT ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் பணியை எண்ணி பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் விதமாக உலக திரையரங்கு  தின வாழ்த்துகளையும் மோடிக்கு தெரிவித்து உள்ளார்.