அதிபர் டிரம்ப் பரிந்துரை

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அமெரிக்க கருவூலத்துறை அதிகாரி டேவிட் மல்பாஸ் என்பவரை அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்து உள்ளார். உலக வங்கியின் தலைவராக இருந்த ஜிம் யோங் கிம் தனது பதவியை ராஜினாமா செய்த பின் கிறிஸ்டினா ஜார்ஜியா அந்த பதவியை வகித்து வந்தது குறிப்பிடதக்கது.

தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு, பொங்கல் பதக்கங்கள்

பொங்கல் திருநாளையொட்டி, 3186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு, பொங்கல் பதக்கங்கள் வழங்க  தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

 

E=MC^2 அபூர்வ கடிதம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த ஊர் ஜெர்மன். இவர் எழுதிய கடிதத்தை அந்த நாட்டுமக்கள் கடவுளின் கடிதமாகக் கூறுகிறார்கள்.

இந்த  கடிதம் சுமார் 3 மில்லியன் டாலர். இது இந்திய பண மதிப்பில் ரூ. 21,27,16,500 ஆகும். இந்த கடிதம் ஆரம்ப தொகையாக ஏலம் விடப்பட்டது.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நேட் டி ஏல நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஏலம் விடப்பட்டது அதில் இந்தக் கடிதம் பத்து லட்சத்திற்கு ஆரம்ப தொகையாக அறிவித்தனர்.

இந்தக் கடிதம் 1954ம் ஆண்டு ஜெர்மனில் ஐன்ஸ்டீன் ஆல் எழுதப்பட்டது. 65 ஆண்டுகளா இந்தக் கடிதம் பராமரிப்பு இருந்து வந்துள்ளது. தற்போது இந்தக் கடிதம் அனைத்து இயற்பியல் கேள்விகளுக்கும் விடை தரும் வகையில் ஐன்ஸ்டீன் எழுதி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவருடைய வரலாற்றை 1996இல் வெளியிட்டனர்.  இவர் யூத குடும்பத்தைச் சார்ந்தவர். இவர்  நான்கு வயது வரை பேசாமல் இருந்த இவரை மந்தமான குழந்தை என்று எண்ணினார்கள். அவருக்கு அவரின் அப்பா கொடுத்த பயிர்ச்சி பெரிய ஈர்ப்பை உண்டு  செய்தது.

அதனால் அவர் இயற்பியல் துறையில் மிகவும் துல்லியமாக பயின்றார். இத்தனைக்கும் அவர் என்றைக்கும் இயற்பியல் ஆய்வுகளின் மூழ்கிக் கிடந்தவர் இல்லை.

பல இடங்களில் சார்பியலின் அடிப்படைகளை எளிமையாக விளக்கி வந்தார். இவர் கண்டுபிடித்தது சார்பியல் சார்ந்து உருவான E=mc^2 என்னும் சூத்திரம் அதில் ஒன்று. அவரின் சார்பியல் தத்துவம் தான் மிகவும் விவாதத்திற்கு உள்ளானது.