கலைஞர் நினைவு நூலகம்

சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நூலகம் அமைக்கப்படவுள்ளது. இது கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னை¸ கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது போலவே தற்பொழுது தமிழகத்தின் பிற பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இந்நூலகம் மதுரையில் அமைக்கப்படவுள்ளது. கலைஞர் நினைவு நூலகம் ரூ.114 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

கிரீடம் 2021

கிரீடம் விருது வருடந்தோரும் ஹலோ எப்.எம் என்ற வானொலி நிலையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை என்ற பிரிவின் கீழ் தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஹலோ எப்.எம் நேயர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.  இவ்விருது  ஹலோ எப்.எம்-ன் தலைமை செயலாக்க அலுவலர் திரு.எஸ்.சுரேஷ் அவர்களால் (10.01.2022) அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது.

எங்கே தவறு?

பாரத பிரதமர் மோடி அவர்கள் நலத்திட்டங்களை துவக்கி வைக்க பஞ்சாப் மாநிலம் சென்றார். விமானம் மூலம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்த இடத்துக்கு செல்ல இருந்த பிரதமர் அங்கு நிலவிய கடுமையான வானிலை மாற்றத்தால் விமானப் பயணத்தை ரத்து செய்து தரை வழி மார்க்கமாக செல்ல முடிவு செய்தனர். தரைவழி மார்க்கமாக சென்று கொண்டு இருந்தபோது அங்கு போராட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால் அங்கு செல்ல இயலவில்லை ஆதலால் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பி விட்டார்.… Continue reading எங்கே தவறு?