அமித்ஷாவை விமர்சிக்கும் பினராயி விஜயன்

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி பாகிஸ்தான் போல் காட்சியளிப்பதாக அமித் ஷா கூறிய கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமித் ஷாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் அமித் ஷாவின் இந்த பேச்சு பைத்தியக்கார தனமானது என கூறியுள்ளார்.

மேலும் அவர் வயநாட்டை பற்றி அமித் ஷாக்கு என்ன தெரியும்.ஆங்கிலேயர்களை  கடுமையாக எதிர்த்த பழசி ராஜா போர் புரிந்த இடம் வயநாடு என்றும் வரலாறு தெரியாமல் அமித் ஷா வயநாட்டை பாகிஸ்தானுடன் ஒப்பிடுவதகவும் தெரிவித்து உள்ளார்.