திமுக எம்.எல்.ஏ., ராதாமணி மரணம் அடைந்தார்

திமுக எம்.எல்.ஏ., ராதாமணி புற்றுநோய் காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாமணி. இவர், 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதேபோல், ராதாமணி திமுக மாவட்ட அவைத்தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.