வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை

மக்களவை தேர்தல் வருவதையொட்டி  பண விநியோகத்தை தடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் அருகே நேற்று இரவு வேகமாக சென்ற காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை இட முற்பட்டனர்.

அப்போது காரில் இருந்த நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் காரை சோதனையிட மறுத்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வழக்கமான சோதனை தான் என கூறியும் ஒத்துழைக்க மறுத்தனர். அதன் பின் பெண் காவலர்கள் வரவழைக்க பட்டு காரை சோதனையிட்டனர். இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.