திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்டது யார்?முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? தலைமைச் செயலாளரா? இல்லை, பிரதமராக இருக்கக்கூடிய மோடியா? எவராக இருந்தாலும், அவர்களுக்கான தண்டனையை மக்கள் ஏப்ரல் 18ம் தேதி வழங்குவார்கள்! என தெரிவித்து உள்ளார்.
Tag: MK Stalin
உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி – ஸ்டாலின்
திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது! அதிமுக அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யாது என்ற வாக்குறுதியை, வழக்கு போட்ட பாமக பெற்றுத்தருமா? தவறினால், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுமா? என பாமகவை நோக்கி கேள்விகள் கேட்டு உள்ளார்.
உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தமிழகத்தில் காலூன்ற முடியாததால், வருமான வரித்துறை – சி.பி.ஐயைக் கொண்டு அ.தி.மு.கவை மிரட்டி அடிபணிய வைத்தது பா.ஜ.க அரசு! ‘இப்போது தேர்தலில் படுதோல்வி அடையப் போகிறோம்’ என்கிற பயத்தால் தி.மு.கவை சீண்டிப் பார்க்கிறார்கள். உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல! என கூறியுள்ளார்..
நடைப்பயிற்சி மேற்கொண்ட ஸ்டாலின் அவர்கள்
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்தித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார்.
வாக்குறுதிகளை அளிப்பது ராகுல்காந்தி, மோ(ச)டி அல்ல!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் ராகுல்காந்தி அவர்கள் அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ 6000 வழங்கும் திட்டத்தை அவர் எப்படிச் செயல்படுத்துவார்? அதற்கு வாய்ப்பே இல்லை என பா.ஜ.க-வினர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே பதில்!வாக்குறுதிகளை அளிப்பது ராகுல்காந்தி – மோ(ச)டி அல்ல! என கூறியுள்ளார்.
நாடும் நமதே! நாற்பதும் நமதே! -திமுக தலைவர் ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் ‘சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்’ இது தலைவர் கலைஞர் அவர்களின் வாக்குறுதி மட்டுமல்ல. கலைஞரின் மகனான இந்த ஸ்டாலினின் வாக்குறுதியும் அதுதான்! சொன்ன வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவேன் என கூறியுள்ளார்.
தமிழகத்தின் இரட்டை அவமானங்கள்?
பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் அவர்கள் தங்களை இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் அல்ல, தமிழகத்தின் இரட்டை அவமானங்கள் என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர் தேனி மக்களின் எழுச்சியை பார்க்கிறேன்! அவர்கள் தேனீக்களாக உங்களை தமிழகத்திலிருந்து விரட்ட தயாராகிவிட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.