நாட்டை சீரழிக்கும் மூவர் யார்?

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் இந்தியாவுக்கு நரேந்திர மோடி, தமிழகத்துக்கு எடப்பாடி , புதுச்சேரிக்கு கிரண்பேடி –  மூவரும் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இழிநிலையில் இருந்து விடுபட, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டு கொண்டு உள்ளார்.

பழனிசாமி மன்னிப்பு கேட்டவேண்டும் – ஸ்டாலின்

சேலம் எட்டு வழிசாலை வழக்கை விசாரித்த ஐகோர்ட் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயிகளை அழைத்து பேசுங்கள் என்று எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டசபையில் நான் முன் வைத்த கோரிக்கையை கூட ஏற்க மறுத்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இத்திட்டத்தை எதிர்த்து வழக்கு போட்ட அன்புமணி ராமதாஸ் தேர்தல் கூட்டணி வைத்து கொண்ட பிறகு அதை பற்றி பேசுவதையே தவிர்த்தார். ஆனால் விவசாயிகளை… Continue reading பழனிசாமி மன்னிப்பு கேட்டவேண்டும் – ஸ்டாலின்

வீரமணி சர்ச்சை பேச்சுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து  பேசிய கி.வீரமணி  கிருஷ்ணர் பற்றி கூறிய கருத்துகள் சர்ச்சையானது. இதனால் அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தது. இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்த மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இது குறித்து கேட்கபட்ட கேள்விக்கு வீரமணி கிருஷ்ணர் பற்றி பேசிய பேச்சு பிரச்சார மேடையில் பேசியது அல்ல. அது பெரியார் திடலில் பேசியது.கேவலபடுத்தி, கொச்சைப்படுத்தி பேச வேண்டும் என்று அவர் அப்படி பேசவில்லை. சில ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ்… Continue reading வீரமணி சர்ச்சை பேச்சுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

ஜோதிமணியை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியில்  போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மத்தியில் உள்ள பாசிச பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டக்கூடிய தேர்தல்தான் இந்த மக்களவை தேர்தல் எனவும் நாட்டில் நல்ல ஆட்சி உருவாக தமிழக வாக்காளர்கள் துணை நிற்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடி?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தி.மு.கழகத்தின் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் நிலமற்ற ஏழை விவசாயக் கூலித்தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கிகளில், ஒரு கிராம் முதல் 40 கிராம் வரை நகைகளின் மீது பெற்றிருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்து உள்ளார்.

திருப்பூரில் ஸ்டாலின் அவர்கள் மக்களுடன் நேரடி சந்திப்பு?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் திருப்பூரில் காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது மக்களை நேரடியாக சந்தித்து உரையாடினார்.  

பூதக்கண்ணாடி எல்லாம் தேவையில்லை?

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தால் கூட அ.தி.மு.க ஆட்சி மீது குறை கண்டுபிடிக்க முடியாது என்கிறார் எடப்பாடி பழனிசாமி. பூதக்கண்ணாடி எல்லாம் தேவையில்லை. உங்களோடு கூட்டணி சேர்ந்திருக்கிறாரே பெரியய்யா – அவர் அ.தி.மு.க வின் ஊழல் குறித்து புத்தகமே எழுதியிருக்கிறாரே. அதுவே போதும் என கூறியுள்ளார்.

மோடியை கடுமையாக சாடும் ஸ்டாலின்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இனிமேல் மோடியின் ஆட்சியை பாரதிய ஜனதா பார்டி ஆட்சி என்று அழைக்க வேண்டாம், கார்ப்பரேட்டுகளுக்காக ஆட்சி நடத்துவதால் கார்ப்பரேட் ஜனதா பார்டி ஆட்சி என்று அழையுங்கள் எனவும் மானம் காத்த மருதுபாண்டியர் மண்ணில் மதவாத தீய சக்திகளை அடியோடு விரட்டிட உறுதியேற்போம், வென்று காட்டுவோம் எனவும் கூறியுள்ளார்.