கமல்ஹாசன் வீடியோவிற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை

மக்கள் நீதி மய்ய தலைவரும்,நடிகருமான கமல் ஹாசன் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரச்சார வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ பதிவு குறித்து எதிர் கட்சிகள் புகார் அளித்ததால் வீடியோ பதிவில் மாற்றங்களை ஏற்படுத்தி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இது குறித்து கமல் ஹாசனும் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.