+2 தேர்வு முடிவுகளை எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்?

தமிழ்நாடு மற்றும் புதுசேரியில் உள்ள +2 மாணவர்களுக்கான பொது தேர்வை மொத்தம் உள்ள 2944 தேர்வு மையங்களில் 861107 மாணவ மாணவிகள் எழுதினர். இந்த ஆண்டு முதல் பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண்கள் விதம் 600 மதிபெண்களுக்கு தேர்வுகள் நடைபெற்றன. மொழி பாடங்களில் இரண்டு தாள்களுக்கு பதிலாக ஒரே தாளாக தேர்வு நடைபெற்றது.
பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் 06.03.2019 அன்று தொடங்கி 22.03.2019 அன்று முடிவடைந்தது.  தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 914 மையங்களில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவர்களும், புதுச்சேரியில் 40 மையங்களில் 14 ஆயிரத்து 985 மாணவர்களும் தேர்வு எழுதினர்.


இந்நிலையில், இந்த பொதுத் தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 11 மண்டலங்களில் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றது.இதையடுத்து, ஏப்ரல் 19ம் தேதியன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மே 8ம் தேதியன்று 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகிறது.


இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடபடும் இணையதளங்களின் முகவரிகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய  இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்களை பெற ஏப்ரல் 22 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு துணை தேர்வுகள் ஆனது ஜூன் 6 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறுவதாக தேர்தல் இயக்ககம் அறிவித்து உள்ளது.