தமிழ் நேரலையின் பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள்

மக்களவை தேர்தல் ஆனது தமிழ்நாட்டில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணபட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் தமிழ் நேரலை நாளிதழ் நடத்திய பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள் விவரம் 1.தென் சென்னை விருகம்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, தி நகர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 19,36,209 ஆகும். சுமதி தங்கபாண்டியன் (திமுக)… Continue reading தமிழ் நேரலையின் பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள்

முதல் கட்ட தேர்தல் நாளை ஆரம்பம்

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இந்த மாதம் 11 ஆம் தேதி முதல் மே மாதம் 19 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்துடன் ஆந்திரா,அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ,ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் ஆனது நடைபெற உள்ளது. ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

நடிகை ஹேமாமாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு?

நடிகை ஹேமாமாலினி கடந்த மக்களவை தேர்தலில் உத்திர பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இந்த முறையும் பிஜேபி சார்பில் மதுராவில் ஹேமாமாலினி போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தன் சொத்து மதிப்பு 101 கோடி ரூபாய் என குறிப்பிட்டு உள்ளார். கடந்த தேர்தலில் போட்டியிடும் போது தன் சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய் என ஹேமாமாலினி கூறி இருந்தது குறிப்பிடதக்கது

மொத்தம் எத்தனை வேட்புமனுக்கள்?

தமிழக மாநிலத்தில் கடந்த 19 ஆம் தேதி துவங்கிய வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.39 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 1569 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். இதில் 171 பெண்களும் 2 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் 508 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. வரும் 29 ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி… Continue reading மொத்தம் எத்தனை வேட்புமனுக்கள்?