மு க ஸ்டாலின் அழைப்பு!

வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ‘#CAA2019 எதிர்ப்பு பேரணி’யில் கட்சி, மதம், சாதி, மாநில எல்லைகளைக் கடந்து அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்து  மு க  ஸ்டாலின்  தனது ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

 

நாட்டை சீரழிக்கும் மூவர் யார்?

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில்
இந்தியாவுக்கு நரேந்திர மோடி, தமிழகத்துக்கு எடப்பாடி , புதுச்சேரிக்கு கிரண்பேடி –  மூவரும் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இழிநிலையில் இருந்து விடுபட, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டு கொண்டு உள்ளார்.

ஏப்ரல் 18 ஆம் தேதி தண்டனை?

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்டது யார்?முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? தலைமைச் செயலாளரா? இல்லை, பிரதமராக இருக்கக்கூடிய மோடியா? எவராக இருந்தாலும், அவர்களுக்கான தண்டனையை மக்கள் ஏப்ரல் 18ம் தேதி வழங்குவார்கள்! என தெரிவித்து உள்ளார்.

பழனிசாமி மன்னிப்பு கேட்டவேண்டும் – ஸ்டாலின்

சேலம் எட்டு வழிசாலை வழக்கை விசாரித்த ஐகோர்ட் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயிகளை அழைத்து பேசுங்கள் என்று எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டசபையில் நான் முன் வைத்த கோரிக்கையை கூட ஏற்க மறுத்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

இத்திட்டத்தை எதிர்த்து வழக்கு போட்ட அன்புமணி ராமதாஸ் தேர்தல் கூட்டணி வைத்து கொண்ட பிறகு அதை பற்றி பேசுவதையே தவிர்த்தார். ஆனால் விவசாயிகளை ஐகோர்ட் காப்பாற்றி உள்ளது. விவசாயிகள் பட்டாசு வெடித்து இந்த தீர்ப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

மக்களின் உணர்வுகளை மதிக்காத பழனிசாமி அரசுக்கு மரணஅடி கிடைத்து உள்ளது. மக்களை கொடுமை படுத்திய எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யமாட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி உடனே அறிவிக்கவேண்டும் என கூறியுள்ளார்.

பிரபல இயக்குநர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாழ்த்து

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி – ஸ்டாலின்

திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது! அதிமுக அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யாது என்ற வாக்குறுதியை, வழக்கு போட்ட பாமக பெற்றுத்தருமா? தவறினால், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுமா? என பாமகவை நோக்கி கேள்விகள் கேட்டு உள்ளார்.

 

வீரமணி சர்ச்சை பேச்சுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து  பேசிய கி.வீரமணி  கிருஷ்ணர் பற்றி கூறிய கருத்துகள் சர்ச்சையானது. இதனால் அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தது.

இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்த மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இது குறித்து கேட்கபட்ட கேள்விக்கு வீரமணி கிருஷ்ணர் பற்றி பேசிய பேச்சு பிரச்சார மேடையில் பேசியது அல்ல. அது பெரியார் திடலில் பேசியது.கேவலபடுத்தி, கொச்சைப்படுத்தி பேச வேண்டும் என்று அவர் அப்படி பேசவில்லை. சில ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளும் திட்டமிட்டு தவறான செய்திகளை மக்களிடம் பரப்புகின்றனர்.

இது உண்மை இல்லை. உண்மையாக இருந்திருந்தால் தவறு என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். திமுகவை பொறுத்தவரை ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கைதான். கலைஞர் கூட பராசக்தி பட வசனத்தில் தெளிவாக கூறி இருப்பார். கோயில்கள் கூடாது என்பதற்காக அல்ல, கோயில்கள் கொடியவர்கள் கூடாரமாக ஆகிவிட கூடாது என்று. இதுதான் எங்கள் கொள்கை. திமுகவில் 90 சதவீதம் இந்துக்கள் தான் இருக்கிறார்கள்.

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால்  என் மனைவியார் கூட கோயில்கள் சென்று வழிபட்டு கொண்டுதான் இருக்கிறார். ஏன் கோயிலுக்கு செல்கிறீர்கள் என்று நான் கேட்டதில்லை. அதனால் வீரமணி விவகாரம் திட்டமிட்டு வேண்டுமென்றே நடக்கிற பிரச்சாரமே தவிர வேறொன்றும் இல்லை என கூறியுள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடி?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தி.மு.கழகத்தின் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் நிலமற்ற ஏழை விவசாயக் கூலித்தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கிகளில், ஒரு கிராம் முதல் 40 கிராம் வரை நகைகளின் மீது பெற்றிருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்து உள்ளார்.

திருப்பூரில் ஸ்டாலின் அவர்கள் மக்களுடன் நேரடி சந்திப்பு?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் திருப்பூரில் காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது மக்களை நேரடியாக சந்தித்து உரையாடினார்.

 

உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தமிழகத்தில் காலூன்ற முடியாததால், வருமான வரித்துறை – சி.பி.ஐயைக் கொண்டு அ.தி.மு.கவை மிரட்டி அடிபணிய வைத்தது பா.ஜ.க அரசு! ‘இப்போது தேர்தலில் படுதோல்வி அடையப் போகிறோம்’ என்கிற பயத்தால் தி.மு.கவை சீண்டிப் பார்க்கிறார்கள். உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல! என கூறியுள்ளார்..