அஸ்வின் குறித்து ராகுல் டிராவிட் கூறுவது என்ன?

ஐபிஎல் தொடரில் கடந்த திங்கள் அன்று நடந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ராஜஸ்தான் வீரர் பட்லரை மண்கட் முறையில் ஆட்டமிழக்க செய்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் ரவிசந்திரன் அஸ்வின் ஜோஸ்பட்லரை விதிமுறைகளின் படிதான் மண்கட் முறையில் ஆட்டமிழக்க செய்து உள்ளார். இதில் தவறு ஒன்றும் இல்லை. இருந்தாலும் அஸ்வின் எச்சரிக்கை… Continue reading அஸ்வின் குறித்து ராகுல் டிராவிட் கூறுவது என்ன?

கொல்கத்தாவை வெல்லுமா பஞ்சாப் அணி?

இன்று கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளுமே தங்கள் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடதக்கது. இரவு 8 மணிக்கு துவங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

வாட்சன் அதிரடியில் சென்னை அணி வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய ஆட்டமானது டெல்லி பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 147 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் தாவன் அதிகபட்சமாக 47 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். சிறப்பாக பந்து வீசிய பிராவோ 33 ரன்கள் விட்டு கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார். 148… Continue reading வாட்சன் அதிரடியில் சென்னை அணி வெற்றி