பத்திரிக்கையாளருக்கு உதவிய ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் டெல்லி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு சென்று கொண்டு இருந்தபோது   இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த பத்திரிக்கையாளர் ரஜிந்தர் வியாஸ் என்பவர் காயம் அடைந்தார். இதனை பார்த்த ராகுல் காயமடைந்த பத்திரிக்கையாளரை தனது காரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ராகுல் காந்தி அவர்களின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.  

காங்கிரஸில் இணைந்த பிரபல நடிகை

இந்தி திரையுலக நாயகியான ஊர்மிளா மடோன்ட்கர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் காஜேவாலா முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார் ஊர்மிளா மடோன்ட்கர். மும்பை வடக்கு மக்களவை தொகுதியில் நடிகை ஊர்மிளாவை நிறுத்த காங்கிரஸ் கட்சி யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.