கலைஞர் நினைவு நூலகம்

சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நூலகம் அமைக்கப்படவுள்ளது. இது கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னை¸ கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது போலவே தற்பொழுது தமிழகத்தின் பிற பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இந்நூலகம் மதுரையில் அமைக்கப்படவுள்ளது. கலைஞர் நினைவு நூலகம் ரூ.114 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

கிரீடம் 2021

கிரீடம் விருது வருடந்தோரும் ஹலோ எப்.எம் என்ற வானொலி நிலையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை என்ற பிரிவின் கீழ் தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஹலோ எப்.எம் நேயர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.  இவ்விருது  ஹலோ எப்.எம்-ன் தலைமை செயலாக்க அலுவலர் திரு.எஸ்.சுரேஷ் அவர்களால் (10.01.2022) அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது.

கோவிட் -19 வேக்சின் பூஸ்டர் டோஸ்

இன்று தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  சென்னை, காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸை செலுத்தி கொண்டார். பூஸ்டர் டோஸை அனைத்து முன்களப் பணியாளர்கள்¸ இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!