கலைஞர் நினைவு நூலகம்

சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நூலகம் அமைக்கப்படவுள்ளது. இது கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னை¸ கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது போலவே தற்பொழுது தமிழகத்தின் பிற பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இந்நூலகம் மதுரையில் அமைக்கப்படவுள்ளது. கலைஞர் நினைவு நூலகம் ரூ.114 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.