கிரீடம் விருது வருடந்தோரும் ஹலோ எப்.எம் என்ற வானொலி நிலையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை என்ற பிரிவின் கீழ் தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஹலோ எப்.எம் நேயர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருது ஹலோ எப்.எம்-ன் தலைமை செயலாக்க அலுவலர் திரு.எஸ்.சுரேஷ் அவர்களால் (10.01.2022) அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது.