விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் – ஏ.ஆர்.ரஹ்மான்

அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளிவர உள்ளது. இதன் தமிழ் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த படத்தில் அயர்ன் மேன் கேரக்டருக்கு விஜய் சேதுபதியும் பிளாக் விடோ கேரக்டருக்கு ஆண்ட்ரியாவும் டப்பிங் பேசி உள்ளனர்.

அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எந்திரன் படத்தின் மூலம் ஈர்க்கபட்டது என இந்த படத்தின் இயக்குனர் ஜோ ரஸ்ஜோ கூறி இருந்தார். இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தை துவங்கும் போது பயத்துடன் துவங்கினேன். பாடல்கள் பிடித்தவர்களுக்கு நன்றி.பிடிக்காதவர்களுக்கு அடுத்த முறை சிறப்பாக செய்து தருகிறேன் என்றார். மேலும் அவர் அயர்ன்மேன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறினார்.