இலங்கையில் நேற்று அடுத்து அடுத்தாக 8 இடங்களில் நடந்த குன்டு வெடிப்புகளில் 290 பேர் பலியாகி உள்ளனர்.500 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.இந்நிலையில் இலங்கையில் மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து இலங்கையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.