தனுசு ராசி நேயர்களே

இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர்தான் தனுசு ராசி நேயர்களே. படத்தின் பெயர் குறித்து கூறியுள்ள இயக்குனர் சஞ்சய் பாரதி  ஜோதிடத்தில் நம்மில் பல பேருக்கு ஆர்வம் உண்டு.எதிர்காலத்தை பற்றி அறிந்து கொள்ள நினைக்கும் அனைவரும் காலையில் செய்திதாள்,தொலைகாட்சியில் ராசி பலன் பார்க்கிறோம். தனுசு ராசி மற்ற ராசிகளுடன் ஒப்பிடும் போது அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. படத்தின் நாயகன் ஹரீஷ் கல்யானும் இந்த ராசிகாரர்தான் என படத்தின் பெயருக்கான காரணத்தை விளக்குகிறார். இந்த படத்தை கோகுலம் கோபாலன் அவர்களின்  ஸ்ரீ  கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.