மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு எதிர்பாராது வீசிய சூறைக்காற்றால் பல இலட்சம் வாழைகள், நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் முழுவதுமாக விழுந்து விவசாயிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அறிவியல் உபகரணங்கள், வானிலை நிலவரங்களால் உணரப்படாத இச்சூறைக்காற்றால் நான்குநேரி, இராதாபுரம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் வட்டங்களைச் சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் அடியோடு விழுந்துவிட்டன.… Continue reading வைகோ அறிக்கை
Tag: வைகோ
இந்தியாவின் பாதுகாப்பை அடகு வைத்த மோடி! – வைகோ
தாராபுரம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்குபெற்று உரையாற்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ அவர்கள் இந்தியா ஒரு ஆபத்தான கட்டத்தைக் கடந்துசெல்ல வேண்டி இருக்கிறது. மிகுந்த கவலை அளிக்கிறது. திருமுருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபடும் பக்தர்கள், திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாளை பக்தியுடன் வழிபடும் பக்தர்கள், தில்லையில் சிற்றலம்பலத்தை வழிபடும் பக்தர்கள், மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், காளியம்மன், வடக்கத்தியம்மன், முத்தாலம்மனை வழிபடும் பக்தர்கள். இருக்கிறார்கள். அதே போல் இதோ பிறை… Continue reading இந்தியாவின் பாதுகாப்பை அடகு வைத்த மோடி! – வைகோ
இயக்குனர் மகேந்திரன் குறித்து வைகோ
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ அவர்கள் இயக்குனர் மகேந்திரன் மறைவு குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார். அதன் விவரம்… தமிழ்த் திரை உலகில் யதார்த்த இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்லூரி காலத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர்.1978-ஆம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படம் மூலம் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை… Continue reading இயக்குனர் மகேந்திரன் குறித்து வைகோ
வைகோ பிரச்சார பயணம் முழு விவரம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ அவர்களின் 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரப் பயணம் முழு விவரம்… நாள்தோறும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணி வரை மார்ச் 29 ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்றத் தொகுதிகள் மார்ச் 30 மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி மார்ச் 31 மாலை 4 மணி முதல் – புதுச்சேரி தட்டாஞ்சாவடி, முதலியார்பேட்டை, கிருமாம்பாக்கம், கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வடலூர், புவனகிரி, சிதம்பரம் ஏப்ரல் 1… Continue reading வைகோ பிரச்சார பயணம் முழு விவரம்
வைகோ சுற்றுப்பயணம் மாற்றம்
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் கீழ்காணும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 29 ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்றத் தொகுதிகள் 30 மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி 31 மாலை 4 மணி முதல் – புதுச்சேரி தட்டாஞ்சாவடி, இந்திரா காந்தி சதுக்கம், மூலகுளம், கரிக்கலாம்பாக்கம், கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வடலூர், புவனகிரி, சிதம்பரம் ஏப்ரல் 3 கோவை – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம். ஏப்ரல் 11 காங்கயம்,… Continue reading வைகோ சுற்றுப்பயணம் மாற்றம்