பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி,உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் காவல் ஆய்வாளராக இருந்த காதர் பாஷா உள்ளிட்ட பல அதிகாரிகள்  பழங்கால சிலைகளை கடத்தல் கும்பல்களுக்கு விற்றதாக குற்றசாட்டு எழுந்தது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை துவங்கிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி  பொன் மாணிக்கவேல் திடீர் என இரயில்வே ஐ.ஜி யாக தமிழக அரசால் பணிமாற்றம் செய்யமாட்டார்.இந்நிலையில் காவல் துறை ஐ.ஜி யாக இருந்து ஓய்வு பெற்ற நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து காவல் துறை அதிகாரிகள் 66 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுக்களை விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி அதிரடியாக இன்று தள்ளுபடி செய்தது. தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்க பட்ட நிலையில் தற்போது காவல் துறை அதிகாரிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.