இயக்குனர் பாலாவின் அடுத்த படம்?

பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆன வர்மா திரைப்படம் தயாரிப்பாளருக்கு திருப்தி அளிக்காததால் ரிலீஸ் செய்யப்படாமல் கைவிடபட்டது. இந்நிலையில் பாலா இயக்க உள்ள அடுத்த படத்தின் கதை தயாராகி உள்ளதாகவும், இதில் ஆர்யாவும், அதர்வாவும் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.