சாம்பியன் ஆன பார்சிலோனா அணி

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாவில் நடைபெற்ற லாலிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணியும், லெவன்டி அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் 62 வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் லா லிகா சாம்பியன் பட்டத்தை பார்சிலோனா அணி 8வது முறையாக கைபற்றி உள்ளது.