உலகிலேயே அதிக வரி வசூலிக்கும் நாடு

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அவர்கள் நமக்கு 100 சதவீத வரி விதித்தார்கள். அவர்களது மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களுக்கு நாம் வரி விதிப்பதில்லை. ஆனால் நமது ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு  இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. இது சரியான விஷயம் அல்ல என கூறியுள்ளார்.