வீரர்களை பாராட்டும் டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தமிழக வீராங்கனை- வீரருக்கு வாழ்த்துகள்! ஆசிய விளையாட்டுப் போட்டியின் வலு தூக்கும் பிரிவில் தங்கம் வென்றிருக்கும் சென்னையைச் சேர்ந்த ஆர்த்தி அருண், வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ள திருச்சி மேலகல்கண்டார் கோட்டை அ.மணிமாறன் ஆகியோரைப் பாராட்டி மகிழ்கிறேன்.இவர்கள் சர்வதேச அளவில் மேலும் பல பதக்கங்களை வென்று தேசம் போற்றும் சாதனைகளைப் புரிந்திட வாழ்த்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

 

 

வன்மையாக கண்டிக்கும் டிடிவி தினகரன் அவர்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் பாதிக்கும் என்ற காரணத்தால்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கெயில் திட்டத்திற்காக விவசாய நிலங்களில் குழாய் பதிக்கப்படுவதை எதிர்த்தார்கள்.ஆனால் மூச்சுக்கு முந்நூறு முறை ‘இது அம்மாவின் ஆட்சி’ என்று சொல்லி ஏமாற்றும் இவர்கள், அம்மா எதிர்த்து வந்த திட்டங்களை தொடர்ந்து அதிகாரிகளையும், காவல்துறையினரையும் குவித்து செயல்படுத்துகிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக அப்பணிகளை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

தமிழக வீரரை வாழ்த்தும் டிடிவி தினகரன் அவர்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியின் 4 x 400 மீ  கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில்  வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ் உள்ளிட்ட இந்திய அணியினருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றும் திருச்சி, லால்குடியைப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், இதன் மூலம் தமிழகத்திற்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார். எதிர்காலத்தில் அவர் நிறைய வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

 

விசாரணை தாமதம் ஏன்? -டிடிவி தினகரன் அவர்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை தாமதம் ஏன்? அரசியல் பின்னணிகள் உள்ள  இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி, விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.

 

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட டிடிவி தினகரன் அவர்கள்

சூலூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் ஏழாவது கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் மே 19 ஆம் தேதி இடை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளார்.அதன் விவரம்…

டிடிவி தினகரன் அவர்களின் வாழ்த்து செய்தி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பக்கத்தில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அதில் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துகள்… ‘எந்தவோர் உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காது இருப்பதே உண்மையான மனித மாண்பு’ என்று போதித்த மகாவீரர் வர்த்தமானரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஜைன மத சகோதர, சகோரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

துன்பங்களில் இருந்து விடுபட நம்பிக்கையும், தெளிவான அறிவும், நன்னடத்தையும் அடிப்படைத் தேவைகள்’ என்ற மகாவீரரின் போதனைகள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை.

‘ஜெயித்தவர்’ என்ற பொருளில் ‘ஜீனர்’ என்று அழைக்கப்பட்ட மகாவீரரின் பிறந்த நாளில், வெறுப்பை அடியோடு அகற்றி, உலகின் ஆகப்பெரிய சக்தியான அன்பால் மனங்களை வென்றிடுவோம். அகமும், புறமும் அன்பான வாழ்க்கை அனைவருக்கும் அமையட்டும் என வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.

பட டீஸரை வெளியிட்ட டிடிவி தினகரன் அவர்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் முத்து கோபால் இயக்கத்தில் அமிர், சாந்தினி உள்ளிட்ட பலர் நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் மூன்றாவது டீஸரை  இன்று காலை 9 மணியளவில் வெளியிட்டார்.

 

 

கண்டனம் தெரிவிக்கும் டிடிவி தினகரன் அவர்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஓசூர் தொகுதி வேட்பாளர் ப புகழேந்தி அவர்களின் பிரச்சார வாகனம் அடித்து நொறுக்கபட்டதர்க்கு அமமுகவின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள்  கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார். மேலும் வன்முறையாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்து உள்ளார்.

 

டிடிவி தினகரன் அவர்களின் வாழ்த்து செய்தி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் உலகெங்கும் வாழ்கிற தமிழ் மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். மகிழ்ச்சியையும் மாண்புகளையும் மீட்டெடுக்கும் ஆண்டாக அமையட்டும்! என தன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை  தெரிவித்து உள்ளார்.