ஐபிஎல் ஏலம்!

ஐபில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட முதல் 10 பேர்களின்  பெயர்  மற்றும் பணத்தொகை பின்வருமாறு

ஐபிஎலில் இன்று இரண்டு போட்டிகள்

இந்தியன் பிரிமியர் லீக்கில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மொகாலியில் மாலை நான்கு மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுமே தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் உள்ளன.

இரவு 8 மணிக்கு டெல்லியில் நடைபெரும் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று உள்ளது. டெல்லி அணி மும்பை அணிக்கு எதிராக வெற்றியும், சென்னை அணிக்கு எதிராக தோல்வியும் பெற்று உள்ளது. இரண்டு போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

சரவெடியாக வெடித்த வார்னர், சாம்சன் சதம் வீண்

இந்தியன் பிரிமியர் லீக்கில் நேற்று நடந்த போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்களை இழந்து 198 ரன்கள் அடித்தது.

அந்த அணியின் துவக்க வீரர் ரஹானே 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இளம் வீரர் சாம்சன் 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உடன் 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். சஞ்சு சாம்சனின் இரண்டாவது ஐபிஎல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

புவனேஷ்குமாரின் முதல் இரண்டு ஓவர்களில் 10 ரன்கள் மட்டும் அடித்த ராஜஸ்தான் வீரர்கள் அடுத்த இரண்டு ஓவர்களில் 45 ரன்கள் அடித்தனர். அடுத்து 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய ஐதராபாத் வீரர்கள் துவக்கம் முதலே அடித்து ஆடினர்.

ஜோனி பேட்ஸ்டோ 28 பந்துகளில் 45 ரன்களும், டேவிட் வார்னர் 37 பந்துகளில் 69 ரன்களும் அடித்து வலுவான துவக்கம் கொடுத்தனர்.ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 201 ரன்கள் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. ஆட்டநாயகன் விருதை ஐதராபாத் வீரர் ரசித்கான் பெற்றார்.

கவனத்தை ஈர்ப்பாரா ஸ்டீவ் ஸ்மித்?

இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு துவங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இன்றைய போட்டியில் வில்லியம்சன்  ஐதராபாத் அணியை வழி நடத்த கூடும். ஒரு ஆண்டு தடைக்கு பின் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்ப உள்ள ஸ்டீவ் ஸ்மித் பழைய பார்ம்க்கு திரும்புவாரா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்றைய போட்டியில் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்ய இரண்டு அணிகளுமே போராடும். பந்து வீச்சுக்கு சாதகமான ராஜிவ் காந்தி மைதானத்தில் ஐதராபாத் அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.

நோ பால் குறித்து விராட் கோலி கூறுவது என்ன?

நேற்று பெங்களூரில் நடந்த போட்டியில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வென்றது. இந்த போட்டியின் கடைசி பந்தை மலிங்கா நோ பால் ஆக வீசியதை நடுவர் கவனிக்க தவறிவிட்டார். அந்த பால் நோ பாலாக அறிவிக்கப்பட்டு இருந்தால் ஆட்டத்தின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி நாங்கள் ஐபிஎல் போட்டிகளை சர்வதேச அளவில் விளையாடுகிறோம். கிளப் லெவலில் இல்லை. நடுவர்கள் கண்களை திறந்து போட்டியை கவனிக்க வேண்டும். மலிங்கா வீசிய அந்த பெரிய நோ பாலை கவனிக்காமல் இருந்தது கேலிக்குறியது ஆகும். என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. நடுவர்கள் விழிப்புடன் செயல் பட வேண்டும் என காட்டத்துடன் தெரிவித்து உள்ளார்.

Mr.360 டிவில்லியர்ஸின் அதிரடி வீண் போனது

இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்று பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ரோஹித் ஷர்மா 48 ரன்களும், சூரியகுமார் யாதவ் 38 ரன்களும், ஹர்திக் பாண்டியா 32 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் அணியின் சாஹல் 4 விக்கெட்களை கைபற்றி அசத்தினார்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.விராட் கோலி 46 ரன்களில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

அந்த அணியின் டிவில்லியர்ஸ் 6 சிக்ஸர்கள், 4 பவுண்ரிகள் உடன் 41 பந்துகளில் 70 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். 4 ஓவர்கள் பந்து வீசி 20 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய பும்ரா ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

விராட் கோலி Vs பும்ரா ஆதிக்கம் செலுத்த போவது யார்?

இந்தியன் பிரிமியர் லீக்கில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு துவங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. விராட் கோலி மற்றும்  பும்ரா களத்தில் இன்று சந்திப்பதால் ரசிகர்கள் இடையே இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த இரண்டு அணிகளுமே தங்கள் முதல் போட்டியில் தோல்வி அடைந்து உள்ளதால் இன்று வெற்றி பெற கடுமையாக போராடும்.பெங்களூர் சின்னசாமி மைதானமானது சேஸிங் செய்ய சாதகமானது என்பதால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

ரஸ்சல், நிதிஷ் ராணா அதிரடியில் கொல்கத்தா அணி வெற்றி

இந்தியன் பிரிமியர் லீக்கில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று  நடந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 218 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய உத்தப்பா 50 பந்துகளில் 67 ரன்களும், நிதிஷ் ராணா 34 பந்துகளில் 63 ரன்களும், ரஸ்சல்  17 பந்துகளில் 48 ரன்களும் எடுத்தனர்.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 59 ரன்களும், மயங்க் அகர்வால் 58 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.48 ரன்கள் உடன் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றிய ரஸ்சல் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

கொல்கத்தாவை வெல்லுமா பஞ்சாப் அணி?

இன்று கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளுமே தங்கள் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடதக்கது. இரவு 8 மணிக்கு துவங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

வாட்சன் அதிரடியில் சென்னை அணி வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய ஆட்டமானது டெல்லி பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 147 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் தாவன் அதிகபட்சமாக 47 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். சிறப்பாக பந்து வீசிய பிராவோ 33 ரன்கள் விட்டு கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் அடித்து ஆடியது. ஷேன் வாட்சன் 26 பந்துகளில் 44 ரன்கள் அடித்து மிஸ்ரா பந்து வீச்சில் ஸ்டம்பிங் செய்யபட்டு வெளியேற்றபட்டார். அதன் பின் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 150 ரன்கள் அடித்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் பெரும் இரண்டாவது வெற்றி இதுவாகும். ஆட்டநாயகன் விருதை ஷேன் வாட்சன் பெற்றார்.