கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் அடுத்ததாக இயக்கும் படம்தான் உயர்ந்த மனிதன். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, அமிதாப் பச்சன் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது. இதில் அமிதாப்பட்சனுக்கு ஜோடியாக ரம்யாகிருஷ்ணன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரம்யா கிருஷ்ணன் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பது குறிப்பிடதக்கது.