உலககோப்பைக்கான இந்திய அணியில் யார்? யார்?

உலககோப்பைக்கான இந்திய அணி தேர்வு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. அதில் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், கேப்டன் விராட் கோலியின் ஆலோசனைகளின் அடிப்படையில் அணியானது தேர்வு செய்யப்பட்டது. ரிஷப் பாண்ட், அம்பத்தி ராயுடு, அஸ்வின் ஆகியோருக்கு உலககோப்பை அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் அணியில் தேர்வு செய்யபட்டு உள்ளனர்.

இந்திய அணியின் விவரம்:

விராட் கோலி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், மகேந்திரசிங் தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா,  தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சமி .