வினோத் இயக்கும் நேர் கொண்ட பார்வை படத்தில் தற்போது நடிகர் அஜித் நடித்து வருகிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகப்பூர் தயாரிக்கும் இந்த படம் பிங்க் திரைபடத்தின் ரீமேக் ஆகும். இதில் நாயகியாக வித்யாபாலன் நடிக்கிறார். இந்த படத்தின் படபிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் நீதிமன்றத்தில் வழக்காடும் நீளமான காட்சியை ஒரே டேக்கில் நடித்து முடித்து பட குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். அவரது திறமையை பார்த்த படகுழுவினர் அனைவரும் கைக்குலுக்கி அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.