தூதுவளை வடை

தேவையான பொருட்கள்:

தூதுவளை – 2 கைபிடி
துவரம் பருப்பு- 25 கிராம்
கடலை பருப்பு- 100 கிராம்
இஞ்சி- 10 கிராம்
பூண்டு- 10 பல்
சின்னவெங்காயம்- 100 கிராம்
பச்சை மிளாகாய் – 5 எண்ணிக்கய்
சீரகம் – 1 ஸ்பூன்
குருமிளகு – 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணை பொரிப்பதற்க்கு

செய்முறை:
முதலில் செய்யவேண்டியது..
துவரம் பருப்பு,கடலைப் பருப்பு உரவைத்து கொர கொரப்பகா அரைந்து கொள்ள வேண்டும்.
சீரகம், குருமிளகு இரண்டயும் பொடியாக அரைந்து கொள்ள வேண்டும்.
இஞ்சியை சிருது சிரிதாகக் கட்பன்னி வைந்து கொள்ளவோம்.
தூதுவலை இலையைக் கட்பன்னி வைந்து கொள்ளவோம்.
சின்னவெங்காயந்தை சிறிதாகக் கட்பன்னி வைந்து கொள்ளவோம்.
அரைந்த துவரம் பருப்பு, கடலைப் பருப்புடன் சீரகம், குருமிளகு, சின்னவெங்காயம், பச்சை மிளாகாய், இஞ்சி சேர்ந்து பிசைய வேண்டும். பூண்டு லேசக தட்டி போடவும். கட்பன்னி வைத்த தூதுவளை இலையும் சேர்ந்து பிசைய வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொல்லவும்.
இதை 10 நிமிடம் வைக்கவும், வாணலியில் எண்ணையை உற்றி சூடனதும். பிசைந்து வைத்த கலவையைச் சிறு சிறுதக தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும் சூடன தூதுவளை வடை ரெடி.

பயன்கள்:
நெஞ்சுசளி, வாய்வு, சீரணம் மற்றும் தலைபரம் சிறந்த மருந்தக உள்ளது.

ஆசிரியர் பணிக்கு திரும்புகிறார் அலிபாபா தலைவர் ஜாக் மா

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, இணைய வழி வணிக நிறுவனமான அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து ஒரு வருடத்தில் விலகுவார் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் ஜாக் மா அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலக போவதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் அவர் எப்போது பதவி விலகுவார் என்பது குறித்து பல செய்திகள் வெளியாகின.

தற்போது தலைமை நிர்வாகியாக இருக்கும் டேனியல் சாங்கிடம் தனது பொறுப்பை ஒப்படைக்கவிருக்கிறார் ஜாக் மா.

உலகளவில் அதிக மதிப்புகள் கொண்ட ஒரு நிறுவனம் அலிபாபா ஆகும். ஒரு வருடத்தில் அதன் மதிப்பு இருமடங்கு வரை உயர்ந்துள்ளது.2019ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று சாங், அலிபாபா நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பேற்பார் என அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஒரு வருட காலம் பதவி மாற்றம் சுமூகமாக நடைபெற உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில பேராசிரியராக இருந்த ஜாக் மா, அலிபாப நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து 1999ஆம் ஆண்டு தொடங்கினார் பின் அது உலகின் மிகப்பெரிய இணையவழி வணிக நிறுவனமாக உருவெடுத்தது.

“தங்களை காட்டிலும் மாணவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றே ஆசிரியர்கள் நினைபார்கள் எனவே நானும், நிறுவனமும் திறமையான இளைஞர்கள் தலைமை பொறுப்பை ஏற்க வழிசெய்வது சரியாக இருக்கும்” என தனது 54ஆவது பிறந்தாளில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜாக் மா தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பங்குதாரர்கள் சந்திப்பு கூட்டம் வரை அவர் அலிபாபாவின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக தொடருவார்.அலிபாபாவின் நிரந்திர கூட்டாளியாக ஜாக் மா இருப்பார்.

ஒரு ராக் ஸ்டாரை போல் உடையணியும் வழக்கம் கொண்டுள்ள ஜாக் மா மீண்டும் பேராசிரியராகப் போவதாக தெரிவித்திருந்தார்.

“இந்த உலகம் மிகப்பெரியது ஆனால் நான் இன்னும் இளமையாக இருக்கிறேன் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன்” என தெரிவித்தார் ஜாக் மா.”ஒரு விஷயத்தை நான் உறுதியாக கூற விரும்புகிறேன். அலிபாபா ஜாக் மாவுக்கானது மட்டுமல்ல ஆனால் ஜாக் மா எப்போதும் அலிபாபாவுக்காக இருப்பார்” என ஜாக் மா மேலும் தெரிவித்தார்.
11 வருடங்களாக அலிபாபாவின் நிர்வாக தலைவராக இருக்கும் ஜாக் மா “சிறந்த திறமையை” வெளிப்படுத்தியுள்ளார் என்று புதிதாக பதவியேற்க இருக்கும் சாங் தெரிவித்துள்ளார்.

ஜாக் மாவின் தற்போதைய சொத்து மதிப்பு 36.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2017ஆம் ஆண்டுக்கான சீன பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார் ஜாக் மா இருப்பினும் ஒருமுறை ப்ளூம்பெர்க் ஊடக நேர்காணல் ஒன்றில் தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்ய தனக்கு நேரமில்லை என்று கூறியிருந்தார் அவர்.
ஆங்ஷூவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராராசிரியாக இருந்த ஜாக் மா, அதே நகரில் இருந்த தனது வீட்டில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அலிபாபா நிறுவனத்தை தொடங்கினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் – Madurai Meenakshi Amman Temple

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.
இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.
இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும். இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.
தல வரலாறு:
மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர். அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.
தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைக்குண்டத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள். சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.
கட்டிடக்கலை:

கோவிலின் மொத்த பரப்பளவு, 45 ஏக்கர். இந்தக்கோவிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் நான்கு கோபுரங்கள் நான்கு திசைகளை நோக்கி உள்ள நுழைவாயில்கள். இந்த பன்னிரெண்டு கோபுரங்களுள் தெற்கு கோபுரம் மிக உயரமானது. ஒன்பது அடுக்குகளை உடைய தெற்கு கோபுரத்தின் உயரம் 52 மீ.
இங்குள்ள கோபுரங்கள் பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டவை. கடைசியில் தேவகோட்டை நகரத்தாரால் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியார் என்பவரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் புதுப்பிக்கப்பட்டது.. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் பழுதுபார்க்கப்பட்டது. மேலும் மூலவருக்காக இரண்டு கோபுரங்கள் உள்ளன, அவை இரண்டும் தங்கத்தால் வேயப்பட்டவை.
மேலும் இங்கு பொற்றாமரைக் குளமும் உள்ளது. இந்தக் குளத்தில் தங்கத் தாமரை உள்ளது. முன்னர் சிவபெருமான் ஒரு நாரைக்கு இங்கு கடல்வாழ் உயிரினங்கள் வாழாது என்று வாக்கு அளித்ததால் இந்தக் குளத்தில் மீன்கள் கூட வாழ்வது இல்லை. மேலும் இந்தக் குளம் நல்ல நூல்களை தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தது என்றும் நம்புகிறார்கள். நூல்கள், ஓலைச்சுவடிகளை இந்தக் குளத்தில் போடவேண்டும், அவை நல்ல நூல்கள் என்றால் மிதக்கும் இல்லையேல் மூழ்கிவிடும்.
கோவிலில் உள்ள மண்டபங்கள்:
• அஷ்ட சக்தி மண்டபம்
• மீனாட்சி நாயக்கர் மண்டபம்
• ஊஞ்சல் மண்டபம்
• ஆயிரங்கால் மண்டபம்
• வசந்த மண்டபம்
• கம்பத்தடி மண்டபம்
• கிளிக்கூடு மண்டபம்
• மங்கையர்க்கரசி மண்டபம்
• சேர்வைக்காரர் மண்டபம்
இங்கு உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும் நடுவில் நடராஜர் சிலையும் உள்ளது. இதை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரானின் அமைச்சர் அரியநாத முதலியார் கட்டினார்.

சிற்பக்கலை:
ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத் தரும் சிலைகள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. வடக்கு கோபுரத்திற்கு அருகில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன. அஷ்ட சக்தி மண்டபத்தில் கலைநயமிக்க எட்டு அம்மன் சிலைகள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் கோவில் கோபுரங்கள், தூண்கள் பலவற்றிலும் பாண்டிய சிற்பிகளின் சிற்பக்கலையை காணமுடியும்.
கிழக்கு கோபுரத்திற்கு அருகில் உள்ள புதுமண்டபத்தில் தலவரலாற்றை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்ட்டுள்ளன. சுவாமி சந்நிதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன.

திருவிழாக்கள்:
இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றது. ஆனி மாதம் ஊஞ்சல் உற்சவம், ஆவணி மூலம், நவராத்திரி விழா, கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழி உற்சவம், தை தெப்பம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
ஆவணி மாத திருவிழா, சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை கொண்டாடும் விழாவாகும். சித்திரைத் திருவிழா, கோவிலின் தலவரலாற்றை எடுத்துரைக்கும் திருவிழாவாகும்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.
எப்படி செல்வது?
• மதுரைக்கு சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
• மதுரையில் ரயில் நிலையமும் உள்ளது(MDU)
• மதுரையில் விமான நிலையமும் உள்ளது. விமான நிலையம், நகருக்கு வெளியில் அமைந்துள்ளது.

ரூபாயின் வரலாறு காணதவீழ்ச்சி மீண்டும் 28பைசா குறைந்தது.


அமெரிக்கடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 28பைசா மீண்டும் குறைந்து ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 72.23 ரூபாயக உள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணையின் மதிப்பு டாலர் 78 உள்ளது. செவ்வாய்கிழமை மீண்டும் 28பைசா குறைந்து உள்ளது.

செவ்வாய் மதியம் வரை ஒரு பீப்பாய் மதிப்பு டாலர் 78 உள்ளது. சர்வதேச குறியிடு 500 புள்ளிகள் குறைந்து உள்ளது.

செவ்வாய்கிழமை காலையில் அமெரிக்க டாலருக்கு ரூபாயின் மதிப்பு 20 பைசா உயர்வாக தொடங்கியது. ஆனால் மதியம் 28 பைசா குறைந்தது.

இருதியில் BSE குறியிடு 509.04 புள்ளிகள் அல்லது 1.34 சதவீதம் முடிவில் 37,413 புள்ளிகளாக முடிவடைந்தது.

திருவெண்காடு புதன் கோவில் – Thiruvenkadu Boothan Temple.

கல்விக்கு அதிபதியான புதன் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு.  இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் – பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக்க புதன் பகவான் மக்களுக்கு காட்சியளிக்கின்றார்.
சலந்தரன் என்பவனுக்கு ஒரு மகன், மருத்துவன். அவன் இறைவனை நோக்கி தவம் செய்து சூலத்தை பெற்றான். அந்த சூலத்தால் நல்லது செய்யாமல் தேவர்களுக்கு தீங்கு விளைவித்தான் மருத்துவன். இதனால் கோபமுற்ற சிவபெருமான், நந்தியை அனுப்பி அவனை அழிக்கச் செய்தார். ஆனால் மருத்துவனோ நந்தியை சூலத்தால் தாக்க, நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் ஏற்பட்டது. பின்னர் சிவபெருமானே அகோர மூர்த்தியாய் தோன்றி மருத்துவனை அழித்தார் என்பது இக்கோவில் வரலாறு.

இங்கு மூர்த்திகள் மூன்று, தீர்த்தங்கள் மூன்று, தலவிருட்சங்கள் மூன்று. சிவன், நடராசர், வீரபத்திரர் ஆகிய மூன்று மூர்த்திகளும், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களும், வடவால், கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்களும் உள்ளன.
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலம் இது. காசிக்கு நிகரான திருத்தலம். காவிரி வடகரை கோவில்களில் பதினொன்றாவது கோவில் இது. மூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பிள்ளைப்பேறு நல்கும் தலம். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல், இங்கு வடவால் விருட்சத்திற்கு கீழ் ருத்ர பாதம் உள்ளது.
திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வந்தபோது, அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தெரிந்ததாம், அவர் அம்மா என்றழைக்க, அம்பிகை அவரை இடுப்பில் சுமந்து கோவிலின் உள்ளே சென்றதாக வரலாறு உண்டு. இன்றும் இக்கோவிலில் சம்பந்தரை சுமந்திருக்கும் அம்பாளை பிரகாரத்தில் காணலாம்.

நவக்கிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், பீடை போகும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதனை வழிபடுவோம் என்றென்றும் ஆனந்தமாக இருப்போம்.
புதனுக்கு உகந்தவை:
ராசி : மிதுனம், கன்னி
அதி தேவதை : விஷ்ணு
நிறம் : வெளிர்பச்சை
தானியம் : பச்சைப்பயிறு
உலோகம் : பித்தளை
மலர் : வெண்காந்தள்
ரத்தினம் : மரகதம்
சமித்து:நாயுருவி

காயத்ரி மந்திரம்:
கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்.

எப்படி செல்வது?
இத்திருக்கோவில் சீர்காழியில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது.
• கும்பகோணம், சீர்காழி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம். மயிலாடுதுறையில் இருந்து
மங்கைமடம் செல்லும் பேருந்துகள் இக்கோவில் வழியாகச் செல்லும்.
• அருகில் உள்ள ரயில் நிலையம் – கும்பகோணம் 18 கி.மீ தொலைவில்.
• அருகில் உள்ள விமான நிலையம் – திருச்சி 96 கி.மீ தொலைவில்