“Mi Band 4” – இன்று சீனாவில் அறிமுகம்

“Mi Band 4” – அறிமுக நிகழ்வு!

சியோமியின் புதிய ஸ்மார்ட்வாட்சான “Mi Band 4” முதன்முதலில் சீனாவில் தான் அறிமுகமாகவுள்ளது. இதன் அறிமுக நிகழ்வு ஜூன் 11 தேதியான இன்று நடைபெரும் என முன்னதாகவே சியோமி நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று சீனாவில் நடக்கவுள்ள இந்த நிகழ்வு அந்த நாட்டு நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கவுள்ளது. இது இந்திய நேரப்படி காலை 11:30 மணியாகும். இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை, சியோமி நிறுவனத்தின் தளத்தில் காணலாம்.

“Mi Band 4” – எதிர்பார்க்கப்படும் விலை!

இன்னும், அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படாத நிலையில், சீனாவில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை 199 சீன யுவான்களாக (1,994 ரூபாய்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்தியாவில் வெளியான “Mi Band 3”, 1,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது.

“Mi Band 4” – எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!

முன்னதாக இந்த ஸ்மார்ட்வாட்ச் பற்றி சியோமி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த  “Mi Band 4” ஸ்மார்ட்வாட்ச் கலர் OLED திரையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்  “Mi Band 3”-யின் திரையை விட பெரிய திரையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி நிறுவனம் வெளியிட்டிருந்த மற்றொரு டீசரின்படி, இந்த ஸ்மார்ட்வாட்ச் 6 வண்ணங்களில் வெளியாகவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சின் முந்தைய வெர்ஷனான “Mi Band 3” மூன்று வண்ணங்களுடனே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்வாட்சில் மோபைல் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் எனவும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை வைத்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்வாட்சில் ஸ்மார்ட்போன்களுக்கு அருகாமையில் கொண்டு சென்றால், அவற்றுடன் தானாகவே இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் NFC தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *