
தேர்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்ய “CVigil” செயலி அறிமுகம்.
வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில் 3 லட்சத்து 36 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர். வாக்காளர் பட்டியலில் சேர்க்க புதிதாக 10 லட்சத்து 14ஆயிரத்து 888 விண்ணப்பங்கள் வந்துள்ளது. தமிழகத்தில் 67,664 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன, மேலும் புதிய வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது.
மக்களவை தேர்தலோடு இடைத்தேர்தல் வந்தால், வாக்குச்சாவடிகளில் இடைத்தேர்தலுக்கென தனியாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு கூறியுள்ளார்.