ஆன்மிகம்கோவில்கள்

திங்களூர் சந்திரன் கோவில்

2018-2019 -கான குருபெயர்ச்சி பலன்கள் பார்க்க

நவக்கிரகங்ளில் சந்திரனுக்கு உகந்த கோவில் திங்களூர் ஆகும். தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ.தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.  இக்கோவிலில் கைலாசநாதரும், பெரியநாயகி அம்மனும் வீற்றிருக்கின்றனர். இங்குள்ள சிவபெருமானின் இடது கண்ணாக விளங்குபவர் சந்திரன்.

வரலாறு – கட்டிடக்கலை:
இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. திராவிடக் கட்டிடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது இக்கோவில். இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் நிலா வெளிச்சம் இங்குள்ள சிவலிங்கம் மேல் படும்.

தல புராணம்:

தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெற வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தார்கள்.மந்திர மலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது,ஆலகால விஷம் வெளிப்பட்டது.அசுரர்கள் வாசுகியின் தலைப்பக்கத்திலும் தேவர்கள் வால் பக்கத்திலும் நின்றுகொண்டு இருந்தனர்.தேவர்களைக் காப்பாற்றுவதற்காக இறைவன் அந்த விஷத்தை தானே அருந்தினார்.ஆனாலும் நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்துவிட்டனர்.அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான்.

அப்பூதி அடிகள்:
திங்களூரில் 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகள் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமான் மீது கொண்ட பற்றால், சிவபெருமான் மீது பக்தி கொண்ட திருநாவுக்கரசர் பெயரை தன் மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயர் வைத்தார். மேலும் திருநாவுக்கரசர் பெயரில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார். 
ஒரு நாள் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்த போது அப்பூதியடிகள் பற்றி கேள்விப்பட்டு அவரை காண சென்றார். திருநாவுக்கரசரை கண்ட அப்பூதியடிகள் அவரை வரவேற்று உணவளிக்க விரும்பினார். தன் மகனை வாழை இலை பறித்து வருமாறு அனுப்ப அங்கே அவனை பாம்பு தீண்டியது.
தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டால் திருநாவுக்கரசர் சாப்பிட மாட்டாரோ என்றென்னிய அப்பூதியடிகள் அதனை மறைத்து உணவளித்தார். மகனை பற்றி அறிந்த திருநாவுக்கரசர், அவனின் உடலை திங்களூர் திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று “ஒன்று கொலாம் அவர் சிந்தை” என்று பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார்.  இதுவே இக்கோவில் வரலாறாகும்.

விவரம்:

புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் சந்திரனின் கிரகணங்கள் இறைவன் சிலை மீது விழுமாறு அமைக்கப்பட்டு இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.

 • இறைவன்: கைலாசநாதர்
 • இறைவி : பெரியநாயகி
 • சந்திரன் தென்கிழக்கு திசை நோக்கி இருக்கிறார்.
 • சந்திரனின் நிறம் : வெண்மை
 • வச்திரம்: வெள்ளைத்துணி
 • தான்யம்; நெல்
 • உணவு: தயிர் சாதம்
 • மலர்: வெள்ளை அரளி

 சந்திரனுக்கு உகந்தவை:

 • ராசி : கடக ராசி
 • அதி தேவதை : நீர்
 • நிறம் : வெண்மை
 • தானியம் : நெல், பச்சரிசி
 • வாகனம் : வெள்ளை குதிரை
 • உலோகம் : ஈயம்
 • மலர் : அல்லி
 • ரத்தினம் : முத்து
 • ஸ்தல விருட்சம் : வில்வமரம்
 • வழிபடும் முறை:

நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரணமாவார். காலரா, நுரையீரல் நோய்கள் போன்றவை நீங்க இவரை வழிபடலாம். வெண்மை நிற மலர்களால் அர்சித்து, வெள்ளை நிற ஆடைகள் உடுத்தி, முத்து மாலை அணிந்து, பெளர்ணமி விரதம் இருந்து வழிபடலாம். 

சந்திர ஹோரைகள்:

கிழமைகள் காலை பிற்பகல் இரவு
ஞாயிறு 9-10 4-5 11-12
திங்கள் 6-7 1-2 8-9
செவ்வாய் 10-11 5-6 12-1
புதன் 7-8 2-3 9-10
வியாழன் 11-12 6-7 1-2
வெள்ளி 8-9 3-4 10-11
சனி 12-1 7-8 2-3

பெளர்ணமி அன்று இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்புக்கு: 04362-262499

2018-2019 -கான குருபெயர்ச்சி பலன்கள் பார்க்க

எப்படி செல்வது?

அருள் மிகு திங்களூர் சிவன் கோவில் (சந்திரன் கோவில் )MAP LINK

திங்களூருக்கு திருவையாருக்கு அருகில் உள்ள திருப்பழனம் சென்று அங்கிருந்து செல்லலாம்.

அருகில் உள்ள ரயில் நிலையம் – கும்பகோணம் 36 கி.மீ தொலைவில்.

அருகில் உள்ள விமான நிலையம் – திருச்சி 126 கி.மீ தொலைவில்.

 • சூரியன்
  குரு
  புதன்
  மதுரை மீனாட்சி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker