3 ஆயிரம் கனஅடியாக உயர்வு?

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கியது.
இதனால் இன்று மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதன்பின் 1500 கனஅடியாக உயர்த்தப்பட்டது
தற்போது ஏரிக்கு சுமார் 3500 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால் அணையில் இருந்து 3000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

நான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்

 

சச்சின் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆக்தர் பந்தையும், சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்தையும் எதிர்கொள்ள அஞ்சினார் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.  இது குறித்து ஷாகித் அப்ரிடி கூறுகையில்,

நான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார். சோயிப் அக்தரின் சில ஸ்பெல்களில் சச்சின் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் சிறந்த பேட்ஸ்களும் நடுங்கினர். மிட் – ஆப் அல்லது கவர் திசையில் பீல்டிங் செய்யும் போது நீங்கள் அதை கவனிக்கலாம். அப்போது ஒரு வீரரின் உடல் அசைவுகள் தெரியும்.

ஒரு பேட்ஸ்மேன் வழக்கமான நிலையில் விளையாடுகிறாரா? அல்லது நெருக்கடியில் இருக்கிறாரா? என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். சோயிப் அக்தர் பயந்தார் என்று நான் சொல்ல மாட்டேன். சச்சின் டெண்டுல்கர் உள்பட பல முன்னணி பேட்ஸ்மேன்கள் அக்தரை எதிர்கொள்ளும் போது பேக்புட் செல்ல வேண்டியிருந்தது. உலக கோப்பையின் போது சச்சின் டெண்டுல்கர் சயீத் அஜ்மல் பந்தையும் எதிர்கொள்ள அஞ்சினார்.

இது பெரிய விஷயல்ல. வீரர்கள் நெருக்கடிக்குள்ளாகும் போது, எதிர்கொள்வது கடினமானதாகி விடும். அப்ரிடி இப்படி சொல்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, நான் ஸ்கொயர் லெக்கில் பீல்டிங் செய்த போது, சோயிப் அக்தர் பந்து வீசும் போது சச்சின் கால்கள் நடுங்கியதை நான் பார்த்தேன் எனக் கூறியிருக்கிறார்.

மக்கள் கடும் அதிர்ச்சி

முக்கிய மருந்துகளின் விலை உச்சரவரம்பை 50 சதவீதம் உயர்த்தி, தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. மருந்து விலை கட்டுப்பாட்டு கொள்கையின்படி, பொதுமக்களுக்கு அத்தியாவசியம் பயன்படுத்தக்கூடிய மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் (என்பிபிஏ) நிர்ணயித்து வருகிறது.  இவ்வாறு விலை கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், சில மருந்துகளில் புதிய மருந்து கலவைகளை சேர்த்து வேறு பெயரில் அதிக விலைக்கு நிறுவனங்கள் விற்றன. நோயாளிகள் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்கும் வகையில் இத்தகைய மருந்துகள் வெளியிடப்படுவதாக தெரிவித்தன. இது பெரும் சர்ச்சையைஏற்படுத்தியது. இந்நிலையில், அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றின் விலை உச்சவரம்பை 50 சதவீதம் உயர்த்தி என்பிபிஏ அனுமதி அளித்துள்ளது.

பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை

M.K.Stalin-தாக்குதல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்!

ஜாமியா மிலியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும், இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்களும், அதனை ஆதரித்தவர்களும் எதிர்வரும் நாட்களில் பதில் சொல்லியாக வேண்டும்.

தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களை கவனத்தில் கொண்டு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை பா.ஜ.க. அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

முதல் முறையாக கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில் இன்று அதிகாலை நிலவரப்படி 92 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. தொழிலாளர் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

கன்சர்வேடிவ் கட்சி தொழிலாளர் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் பல்வேறு தொகுதிகளிலும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். குறிப்பாக வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் முக்கிய தொகுதிகளை தொழிலாளர் கட்சி இழந்தது.

ஸ்காட்லாந்து தேசிய கட்சியானது, தொழிலாளர் கட்சி வசம் இருந்த ரூதர்கிளன், ஹாமில்டன் மேற்கு ஆகிய தொகுதிகளையும், கன்சர்வேடிவ் கட்சி வசம் இருந்த ஆங்கஸ் தொகுதிகளையும் கைப்பற்றியது.

டார்லிங்டன் உள்ளிட்ட சில தொகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சியானது தென்மேற்கு லண்டனில் புட்னி தொகுதியை கன்சர்வேடிவ் கட்சியிடம் இருந்து கைப்பற்றியது.

கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால் போரீஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராவார்

இ சிகரெட் தடையா

மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமனும் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

சிறுவர்களின் நலனை கருத்தில் கொண்டு இ சிகரெட் தடை செய்யப்பட்டுள்ளது உடனே அமலுக்கு வருகிறது என அறிவித்தார்.

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

1) ராமேஸ்வரம்,

2) திருராமேஸ்வரம்,

3) குருவிராமேஸ்வரம், 4) காமேஸ்வரம்,

ஆகிய நான்கும் சதுர்த்த ராமேஸ்வரம் எனப் போற்றப்படுகின்றன.
இந்த நான்கு திருத்தலங்களிலும் மகா கணபதிக்கான `சதுராவ்ருத்தி தர்ப்பணம்’ எனும் விசேஷமான பூஜையை, ஆகமப் பூர்வமாக அகத்தியரின் முன்னிலையில், ஸ்ரீராமபிரான் நிகழ்த்தியாக ஞானநூல்கள் சொல்கின்றன.

தொடர்ந்து நான்கு மாதங்கள்… ஒவ்வொரு மாதத்தின் அமாவாசை திதியில் ஒரு திருத்தலம் என்ற கணக்கில்,

ராமேஸ்வரம் தொடங்கி இந்த நான்கு தலங்களுக்கும் சென்று, இறை தரிசனத்தோடு பிதுர் வழிபாடு செய்து வருவது மிகவும் விசேஷம். இதனால், நமக்கும் நம் சந்ததியினருக்கும் சகல நன்மைகளும் உண்டாகும்.

1. ராமேஸ்வரம்

தென்னாட்டு புண்ணிய க்ஷேத்திரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரத்தின் மகிமைகளும் திருக்கதைகளும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்தவையே. ஆகவே, இத்தலம் குறித்த அபூர்வ தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

ஸ்ரீராமர் – சீதாதேவி இருவரும் ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு முன்பே, இந்தத் திருத்தலம் `அக்னித் தீர்த்த நீராடல்’ தலமாக, வெவ்வேறு திருப்பெயர்களில் பிரசித்தி பெற்றிருந்ததாம். இங்கிருந்து தனுஷ்கோடிக்குச் செல்லும் பாதையில், சுமார் 4 கி.மீ தொலைவில் கோயில் கொண்டிருக்கிறாள் நம்புநாயகி அம்பிகை. நம்பு, நம்பன், நக்கன் என்றால் ஈஸ்வரனையே குறிக்கும். இந்த நம்புநாயகி அம்மன் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் ஜடாயு தீர்த்தம் உள்ளது. ஸ்ரீராமர் நீராடிய ஜடாயு தீர்த்தத்தின் மகத்துவத்தை சுகபிரம் மருக்கு வியாசர் விளக்கியுள்ளார். நம்புநாயகி அருளும் பூமியும், ஜடாயு தீர்த்தமும் ராமநாத சுவாமிப் பிரதிஷ்டைக்கும் மூத்தவை.

அதேபோல், ராமேஸ்வரம் சிவாலயத்தில் சேதுமாதவ பெருமாள் சந்நிதி அருகில் புண்ணிய தானேஸ்வரர், பாபபட்சேஸ்வரர் சந்நிதிகளும் உண்டு. ராமநாத ஸ்வாமியைத் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், இந்த மூர்த்திகளையும் அவசியம் தரிசித்து வாருங்கள்.

கால விரயம், பொருள் விரயம் செய்ததால் ஏற் படும் பிரச்னைகளும், அறியாத வகையில் தவறான வழிகளில் பொருளீட்டியதால் ஏற்பட்ட பாவங்களும், பித்ரு தோஷங்களும் நீங்கிட ராமேஸ்வரம் சென்று வழிபடவேண்டும். இங்கு ஒரே நாளில் 32 தீர்த்தங்களில் நீராடுவது விசேஷம்.

2. திருராமேஸ்வரம்

மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி மார்க்கத் தில், சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ள திருத்தலம் திருராமேஸ்வரம். சீதாதேவிக்கு, அவள் மகா லட்சுமியின் அவதாரம் என்று ராமபிரான் உணர்த்திய திருத்தலம் என்பார்கள்.

திருமகள், சீதாலட்சுமியாக சிவலிங்க மூர்த்தத் துக்கு பூஜை செய்யும் அபூர்வ திருக்கோலத்தை இங்கே தரிசிக்கலாம். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், துவாதசி மற்றும் பஞ்சமி திதி நாள்களிலும், அனுஷ நட்சத்திர நாளன்றும், இங்கு உரலில் மஞ்சள் இடித்து மங்களாம்பிகைக்குச் சாற்றி வழிபடுவார்கள். இதனால் மங்கலகரமான வாழ்வு ஸித்திக்கும் என்பது நம்பிக்கை. சுவாமியின் திருப்பெயர் ஸ்ரீராமநாதஸ்வாமி. ஏமாந்து இழந்த பொருள் மற்றும் சொத்துகளை மீட்டெடுக்க அருள் வழங்கும் தலம் என்பார்கள் பெரியோர்கள். இங்கு, தீர்த்த நீராடல் விசேஷமானது.

3. குருவி ராமேஸ்வரம்

திருவாரூாிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது குருவி ராமேஸ்வரம்; கேக்கரை எனும் ஊர் வழியாகச் செல்லலாம். ஸ்ரீராமர், குருவிக்கு முக்தி தந்தத் தலம். இத்தலத்துக்கு திருப்பள்ளிமுக்கூடல் என்றும் திருப்பெயர் உண்டு. இங்கே அருள்பாலிக்கும் இறைவன் ஸ்ரீமுக்கோணநாதேஸ்வரர்; அம்பாளின் திருநாமம் ஸ்ரீஅஞ்சனாட்சி.

ஜடாயுவுக்கு அவரது முக்தியைக் குறித்து ஈஸ்வரன் எடுத்துரைத்த தலம் இது. அப்போது, ராவணனால் நான் மடிந்தால், புண்ணிய தீர்த்தங் களில் நீராடிய பலன் கிடைக்காமல் போகுமே’ என்று வருந்தினாராம் ஜடாயு. அவருக்காக இங்கே இறைவன் உருவாக்கிய தீர்த்தமே திருமுக் கூடல் தீர்த்தம் என்கின்றன ஞானநூல்கள்.

ராமாவதாரத்துக்கு முன்பே ராம நாமத்தை ஜபித்து வாழ்ந்தவர்கள் `ராமகே(தி)’. இவர்கள் திரேதா யுகத்தில் பல்லாயிரக்கணக்கில் வசித்த `ராமகே’ எனும் இடமும் கயாவுக்குச் சமமாகப் போற்றப்படும் கேக்கரையும் குருவி ராமேஸ்வரத் தின் அருகிலிருப்பது விசேஷம்.

4. காமேஸ்வரம்

நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே அமைந்திருக்கிறது, காமேஸ்வரம். புனிதமான அரிச்சந்திரா நதி, கடலில் கலக்கும் பிதுர்முக்தி பூமி காமேஸ்வரம். சிவாலயம், விஷ்ணு ஆலயம் இரண்டும் அமைந்த க்ஷேத்திரம்.

இதன் தொன்மைப் பெயர் `ராமேஸ்வர ராமேஸ்வரம்’. பின்னர் காமேஸ்வரம் என்றாயிற்று. நல்லவிதமான விருப்பங்களுக்கு ‘காமம்’ என்று பொதுப்பெயர் உண்டு. அப்படியான நம்முடைய நல்ல விருப்பங்களை நிறைவேற்றும் திருத்தலம் இது என்றும் சொல்லலாம். அருள்மிகு காமேஸ் வரரும், காமாக்ஷி அம்பிகையும் அருளும் இந்தத் தலத்தில், திரேதா யுகத்தில் ராமனும், துவாபர யுகத்தில் கிருஷ்ணனும் வழிபட்டுள்ளார்கள். வாழ்வில் அறிந்தோ அறியாமலோ நாம் சொன்ன பொய்யுரைகளால் ஏற்பட்ட பாவங்கள், நமது வாக்கால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்குவதற்கு வழிபட வேண்டிய திருத்தலம் இது. இந்தக் காமேஸ்வரம் திருத்தலத்துக்குச் சென்று, அரிச்சந்திரா நதி கடலில் சங்கமமாகும் பகுதி யிலோ, காமேஸ்வரம் கடற்கரையிலோ நீராடுவ தால் சகல பாவங்களும் நீங்கும்; வாழ்க்கைச் செழிக்கும்.

சச்சின் டெண்டுல்கருக்கு மேலும் ஒரு மகுடம்

 

ICC Hall of fame அவார்ட் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கப்பட்டுள்ளது ,இதற்கு முன்பு டிராவிட் இந்த அவார்ட்  பெற்று இருக்கிறார்.