மத்திய அரசில் காலிப்பணியிடங்கள் !!!

மத்திய அரசின் வெவ்வேறு துறைகளில் மொத்தம் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் அளித்துள்ள பதிலில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் உள்ள வெவ்வேறு துறைகளுக்கு மொத்தம் 38.02 லட்சம் பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். அந்த வகையில் மார்ச் 1, 2018- வரையிலான தகவலின்படி மத்திய அரசில் மொத்தம் 6.84 லட்சம் பணியிடங்கள் காலியாக… Continue reading மத்திய அரசில் காலிப்பணியிடங்கள் !!!

போயிங் நிறுவனம் தன் விமானத்தை எங்கு நிறுத்தியுள்ளது என்று பாருங்கள்!

மென்பொருள் கோளாறு காரணமாக பாதுகாப்பு எச்சரிக்கை வேலை செய்யாததால், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள், தரையில் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் லயன் ஏர் மற்றும் எதியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் விபத்தை சந்தித்து 351 இறந்து போனதற்கும் இந்த தொழில்நுட்ப கோளாறுதான் காரணம். எனவே, இந்த போயிங் விமானங்கள், வாசிங்டனில் உள்ள போயிங்கின் ரென்டன் மையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த விமானங்களை நிறுத்துமிடம் முழுமையடைந்ததால், அந்த நிறுவனம் தன் ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சில… Continue reading போயிங் நிறுவனம் தன் விமானத்தை எங்கு நிறுத்தியுள்ளது என்று பாருங்கள்!

ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்தார். பிரதமர் மோடி 14 வது ஜி 20 உச்சி மாநாடு ஜப்பானில் நாளை தொடங்குகிறது இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் சந்திக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

புதிய உளவுத்துறை இயக்குனராக அரவிந்த் குமார் நியமனம்

இரண்டு உளவுத்துறை அமைப்புகளுக்கும் புதிய இயக்குநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இதில், அரவிந்த் குமார் உளவுத்துறை இயக்குநராகவும், ‘ரா’ உளவு அமைப்பின் தலைவராக சமந்த் கோயலும் பதவி வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் குமார் மற்றும் சமந்த் கோயல் ஆகிய இருவரும், 1984ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர். உளவுத்துறை இயக்குநராக இருந்த ராஜீவ் ஜெயினுக்கு பதிலாக, அரவிந்த் குமாரும், ‘ரா’ உளவு அமைப்பின் தலைவராக இருந்த, அனில் தாஸ்மானாவுக்கு பதிலாக சமந்த் கோயலும்… Continue reading புதிய உளவுத்துறை இயக்குனராக அரவிந்த் குமார் நியமனம்

பிரதமர் திரு நரேந்திர மோடி வானொலியில் உரையை

பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆற்றவுள்ள மன் கி பாத் உரையை அனைவரும் கேட்டு பயனடைய வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவ்டேக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

35 ஆண்டுகளுக்கு முந்தைய விண் கல் கண்டெடுப்பு!!

கோவையில் பண்ணை வீடு ஒன்றில் 35 ஆண்டுகளுக்கு முந்தைய விண் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த புவியியல் ஆய்வு மையம், கண்டெடுக்கப்பட்டது விண்கல்தான் என்பதை உறுதி செய்துள்ளது. கோவையை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர் தனது சகோதரரின் பண்ணை வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வித்தியாசமான கல் ஒன்றை கண்ட அவர், அதனை எடுத்து புவியியல் ஆய்வு மையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்டது விண் கல் என்பது உறுதி… Continue reading 35 ஆண்டுகளுக்கு முந்தைய விண் கல் கண்டெடுப்பு!!

பேசியுள்ள லியனார்டோ டிகாப்ரியோ!

சென்னையின் தண்ணீர் பஞ்சம்’. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலர் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு “இந்த நிலையிலிருந்து சென்னையை மழையினால் மட்டுமே காப்பாற்ற முடியும்” என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், தண்ணீர் இல்லாத இந்த நகரை, காலியான கிணற்றுடன் ஒப்பிட்டுள்ளார் டிகாப்ரியோ. “முக்கிய நான்கு நீராதாரங்களும் வற்றிப்போனதால், இந்த தெனிந்திய நகரம் மிகப்பெரிய தண்ணீர் பிரச்னையை சந்தித்து வருகிறது. இந்த தண்ணீர் பிரச்னையால் மக்கள் வீதிகளில் தண்ணீருக்கான பல மணி நேரம்… Continue reading பேசியுள்ள லியனார்டோ டிகாப்ரியோ!

இந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை

புதுடில்லி:பார்லிமென்ட் நிலைக்குழு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் ‘1980 – 2010ல் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் கோடியிலிருந்து 34 லட்சம் கோடி வரை இருக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்து பார்லிமென்ட் நிலைக்குழு லோக்சபாவில் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:தேசிய நிதி மேலாண்மை பயிற்சி மையம், தேசிய பொதுக் கொள்கை மற்றும் நிதி பயிற்சி மையம், தேசிய பொருளாதார ஆய்வு… Continue reading இந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை

பயங்கரவாதிகள் கொலை!

பாக்தாத்: மத்திய கிழக்கு நாடான, ஈராக்கின் கிர்குக் நகரில், சிறப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 14 ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2017ல், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து, நாடு முழுவதுமாக மீட்கப்பட்டதாக ஈராக் கூறியது. ஆனால், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அவ்வப்போது, தாக்குதல்களை …

நூற்றாண்டு கிண்ணம், இதன் மதிப்பு என்ன தெரியுமா?

4.8 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 17-ஆம் நூற்றாண்டு சீன கிண்ணத்தை, ஒரு குடும்பம் டென்னிஸ் பந்துகளை போட்டு வைக்கப் பயன்படுத்தியுள்ளனர். நல்ல வேளை அவர்கள் அந்த கிண்ணத்தை தூக்கி எறியவில்லை. சுவிஸ் ஏல நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர்கள், இந்த குடுப்பத்தின் வீட்டை பார்வையிட்டு, அங்குள்ள பழங்கால பொருட்களை மதிப்பிடுகையில் இதை கண்டுபிடித்தனர். இந்த மின்னும் நிறத்துடன், பீனிக்ஸ் பறவையின் தலை போல் செய்யப்பட்ட கைப்பிடிகள் கொண்ட இந்த கிண்ணம், 17ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என நம்பப்படுகிறது. இந்த… Continue reading நூற்றாண்டு கிண்ணம், இதன் மதிப்பு என்ன தெரியுமா?