மு.க. ஸ்டாலின் கண்டனம்

விவசாய கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்ததற்க்கு கண்டனம் தெரிவித்து மு.க. ஸ்டாலின்  தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்  

தீவனத்தை எடுத்துச்செல்ல ‘கட்டு’ இயந்திரம்!

உடுமலை:உலர் தீவனத்தை எளிதாக எடுத்துச்செல்லவும், இருப்பு வைக்கவும், ‘கட்டு’ கட்டும் இயந்திரம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், உலர் தீவன தேவைக்காக, சோளம் மற்றும் மக்காச்சோளம் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடைக்கு பிறகு, சோளத்தட்டை விளைநிலங்களில் எடுத்துச்செல்ல, விவசாயிகள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். டிராக்டர் உட்பட வாகனங்களில், உலர் தீவனத்தை எடுத்துச்செல்லும் போது, சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இயந்திரம், உலர் தீவனத்தை எளிதாக கொண்டு செல்ல உதவுகிறது.இந்த இயந்திரம், மக்காச்சோளம் மற்றும்… Continue reading தீவனத்தை எடுத்துச்செல்ல ‘கட்டு’ இயந்திரம்!

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து விவசாயிகளுக்கும் 6 ஆயிரம் பிரதம மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தின் கிழ் 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள அனைத்து விவசாய பெரு மக்களுக்கு வழங்கப்படும். இந்த தொகை 3 தவணையாக தலா ரூபாய் 2000 வீதம் விவசாயிகளின் வாங்கி கணக்கில் செலுத்தப்படும்

வேப்பமரமும் அதனால் ஏற்படும் பயன்களும்

வேப்பமரம் இந்தியாவில் உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. தமிழகத்தில் கிடைக்கும் வேப்பமரத்தின் கொட்டையிலிருந்து பெறப்படும் ‘அஷாடிராக்டிஷன்’ என்ற விலை மதிப்புள்ள வேதியல் பொருள் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு அதிகமாக காண்பபடுவதில்லை. போன வருஷம் வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ.38, இந்த வருஷம் கிலோ ரூ.72. இது இந்த ஒரு வருஷத்தின் ஏற்றமல்ல. பல வருஷங்களாகவே வேப்பங்கொட்டைகள் விலை ஏற்றமாகவே தொடர்ந்து உள்ளது. காரணம், வேப்பமரம் ஒரு விவசாயப் பயிர் கிடையாது. மேலும்… Continue reading வேப்பமரமும் அதனால் ஏற்படும் பயன்களும்

மரபணு மாற்றிய பருத்தி விதை விலை குறைப்பு

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளுக்கு, அடுத்த நிதியாண்டுக்கான அதிகபட்ச விற்பனை விலையை பாக்கெட்டுக்கு ரூ.10 குறைத்து ரூ.730 ஆக மத்திய வேளாண் அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.  தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிகபட்ச விற்பனை விலை குறைக்கப்பட்டு வருகிறது. ஒரு பாக்கெட் பருத்தி விதை என்பது 450 கிராம் கொண்டது. நடப்பு நிதியாண்டில் போல்கார்டு 2 ரக பருத்தி விதைகளுக்கான விலை ராயல்டி கட்டணம் சேர்த்து பாக்கெட்டுக்கு ரூ.740 என உள்ளது. வரும் நிதியாண்டுக்கு, அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துக்கு… Continue reading மரபணு மாற்றிய பருத்தி விதை விலை குறைப்பு

ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு

10 ஆண்டு போராட்டத்திற்குப் பின், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.இதன் மூலம் மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பதுடன் சர்வதேச அளவில் நல்ல விலை கிடைக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஈரோடு,திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு மணமும் நல்ல நிறமும் இருப்பதால் அதற்கு நல்ல விலை கிடைக்கிறது. பல்வேறு மருத்துவச் சிறப்புகளையும் மஞ்சள் கொண்டுள்ளது. இயற்கை மருத்துவத்திலும் மஞ்சள் பரிந்துரை செய்யப்படுகிறது. மஞ்சளுக்கு இத்தைகைய அங்கீகாரம் கிடைத்திருப்பது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சம்பா பருவ நெல் கொள்முதல் இலக்கு

சம்பா பருவ நெல் கொள்முதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் 15 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.

பிரதம மந்திரி வேளாண் உதவி நிதித் திட்டம்

  இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் ,சலுகைகளும் இடம் பெற்று இருந்தன. இதில் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும், பிரதம மந்திரி வேளாண் உதவி நிதித் திட்டம் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறும் அமைப்புசாரா பணியாளர்களில் 60 வயதுக்கு… Continue reading பிரதம மந்திரி வேளாண் உதவி நிதித் திட்டம்

இலுப்பை சிறப்புகள்!!!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்ற முதுமொழியை பல முறை கேட்டிருப்போம். ஆனால், நம்மில் எத்தனை பேர் இலுப்பைப் பூவை பார்த்திருக்கிறோம்? சுவைத்திருக்கிறோம்? குறைவாகவே இருக்கும். அதற்குக் காரணம் இலுப்பை மரங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதே. இருப்பையிலிருந்து இலுப்பைக்கு ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் ‘இருப்பை’ என்றழைக்கப்பட்ட இலுப்பைத் தாவரம் மது, மதுகம், மதூகம், குலிகம், சந்தானகரணி, அட்டி போன்ற இதர பெயர்களாலும் அழைக்கப்பட்டதாக பல தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. இவற்றில் முதல்… Continue reading இலுப்பை சிறப்புகள்!!!

உயிர்க்காற்று இலவசம்…!

உலகில் அதிக மரியாதைக்குரியவை மரங்கள்தான். மனிதனின் சுயநலத்தால் சூனியமாக்கப்படும் சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தி, மழையீர்ப்பு மையங்களாகத் திகழும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருப்பதுதான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணம் என்கிறார்கள், விஞ்ஞானிகள். வாகனங்கள் காற்றில் உமிழும் கரியமில வாயுவை சாலையோர மரங்கள் உறிஞ்சிக்கொண்டு, உயிரினங்களுக்கு ஆயுள் தரும் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. எந்தப் பலனையும் எதிர்பாராமல், 24 மணி நேரமும் சமூகப் பணி செய்யும் மரங்களை நம்மில் எத்தனை பேர் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்? இனியாகிலும், மரங்களை மரியாதையுடனும்… Continue reading உயிர்க்காற்று இலவசம்…!