கருவூல மையம் திறப்பு

நிதித்துறை சார்பில் கோவை -கிணத்துக்கடவில் கிணத்துக்கடவு வட்டம் தொடர்புடைய பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் பட்டியல்கள் ஏற்பளிக்கவும், ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வசதிகள், முத்திரை தாள்களை பாதுகாக்கும் காப்பறை வசதிகளுடனான சார் கருவூல அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி

இந்திய தபால் நாடு முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையத்தைக் கொண்டுள்ளது. தற்போது தபால் நிலையங்கள் வங்கிகளாக செயல்படத் தொடங்கிவிட்டது. சேமிப்பு கணக்கு மற்றும் நிலையான வைப்பு ஆகியவற்றை வெகுவாக செயல்படுத்தி வருகிறது.

தபால் நிலையத்தில் 9 விதமான முதலீட்டு முறைகள் உள்ளன. இந்திய அரசாங்கத்தின் சிறு சேமிப்புத் திட்டங்கள் அவை: சேமிப்பு கணக்கு, தேசிய சேமிப்பு கால வைப்பு கணக்கு (Recurring Deposit Account), தேசிய சேமிப்பு வைப்புக் கணக்கு, தேசிய சேமிப்பு மாத வருமானம் கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டக் கணக்கு, பொது வட்டி சேமிப்பு கணக்கு, தேசிய சேமிப்பு சான்றிதழ்கல் கணக்கு மற்றும் கிசான் விகாஸ் பத்திர கணக்கு ம்ற்றும் சுகன்யா சம்ரிதி கணக்கு ஆகிய கணக்கு வகைகள் உள்ளன.

இந்திய அஞ்சல் அலுவலம் தேசிய ஓய்வூதிய முறை கீழ் கணக்குகளை வழங்குகிறது. இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி மூலம் நிர்வகிக்கப்படும் தன்னார்வ ஓய்வூதிய திட்டமாகும்.

தபால் அலுவலக சேமிப்பு வட்டி விகிதங்கள்
தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் ஆண்டுக்கு 4 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டி வழங்குகிறது.

சேமிப்பு கணக்கு முதலீடு/ குறைந்தபட்ச இருப்பு தொகை
அஞ்சல் அலுவலகம் சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூ.20 மட்டுமே. அஞ்சல் அலுவலகத்தின் காசோலை புத்தக வசதியுடன் சந்தா இல்லாமல் ஒரு சேமிப்பு கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்பு ரூ.50 மட்டுமே. செக் புக் வசதி வேண்டுமென்றால் ரூ.500 ஐ குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்?

நடைபெறவுள்ள 2019 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இரண்டாம்கட்டப் பட்டியல் விவரம் பின்வருமாறு