மத்திய அரசின் அறிவிப்புக்கு கடும் கண்டனம்-டிடிவி

 

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் 

 

மேலும்  தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும்  டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்

பயனற்ற ஆளுநரின் உரை-டிடிவி தினகரன்

ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இல்லாத, மக்களுக்கு எந்தப் பயனும் தராத அறிவிப்புகளின் தொகுப்பாக ஆளுநரின் உரை அமைந்திருக்கிறது. தமிழக மக்களை வாட்டி வதைத்து வரும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான அறிவிப்புகளை வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது என்று  டிடிவி தினகரன்  தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

திமுக வளர்பிறையா? தேய்பிறையா?

“திமுக வளர்பிறையா? தேய்பிறையா? ” என்று கேள்வி எழுப்பி அதற்கான விளக்கத்தை  புள்ளி விவரங்களுடன் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

இந்து ரக்‌ஷா தளம் பொறுப்பு?

ஜேஎன்யுவில் நடந்த தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் அமைப்பின்,  பூபேந்திர தோமர், பிங்கி சவுத்ரி ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.

தேச விரோத நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால்  அவர்களும் ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்த அதேபோன்ற தாக்குதல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். ஜேஎன்யு கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்து வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாது’’ என்று  கூறியுள்ளார்.

பொங்கல் பரிசு!

தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 35 ஆயிரம் ரே‌ஷன் கடைகளில் நாளை (9-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இரண்டு 500 ரூபாய் தாள்களாக வழங்க வங்கிகள் மூலம் பணம் எடுத்து ரே‌ஷன் கடை ஊழியர்கள் தயார் நிலையில் கையில் வைத்துள்ளனர்.

ரே‌ஷன் கடைகளில் தினசரி 250 முதல் 300 பேருக்கு தெரு வாரியாக பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) மூலமாகத் தான் பொங்கல் பரிசு வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு இல்லை என்றால் அந்த குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ‘ஒருமுறை கடவுச்சொல்’ அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரஜினி-உதயநிதி மோதலா ?

ரஜினி ,”திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் சம்பந்தமாக வன்முறை வேண்டாம்” என தெரிவித்து இருந்தார் , அதற்கு  உதயநிதி அவர்கள் தனது ட்விட்டர்  பதிவில் “உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு வன்முறை” என்று அஞ்சும் வசதியான ,வயசான பெரியவர்களை பத்திரமாக வீட்டிலிலேயே விட்டு வரவும்  என்று பதிவிட்டுள்ளார் .

மு க ஸ்டாலின் அழைப்பு!

வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ‘#CAA2019 எதிர்ப்பு பேரணி’யில் கட்சி, மதம், சாதி, மாநில எல்லைகளைக் கடந்து அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்து  மு க  ஸ்டாலின்  தனது ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

 

இராணுவம் கொந்தளிப்பு?

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு, தேசத் துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து பெஷாவர் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர், ‘‘முன்னாள் ராணுவ தளபதியாக, முப்படை தலைவராக, நாட்டின் அதிபராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்கு சேவை செய்து, பல போர்களில் ஈடுபட்டவர் நிச்சயமாக தேசத் துரோகியாக இருக்க முடியாது. இந்த முடிவு சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல், தன்னிச்சையாக அவசர கதியில் எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல் சாசனப்படி நீதி வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் விரும்புகிறது,’’ என்று தெரிவித்துள்ளார் .

கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்! வெற்றி?தோல்வி?

ட்ரம்ப்பை பதவியில் இருந்து நீக்குவதற்காக கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக 229 உறுப்பினர்களும் எதிராக 194 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். எனவே கண்டனத் தீர்மானம் நிறைவேறியது. கண்டனத் தீர்மானம் செனட் சபையிலும்  நிறைவேறினால் மட்டுமே, அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்க முடியும். ஆனால் 100 இடங்களைக் கொண்ட செனட்டில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 எம்.பி.க்களுடன் பெரும்பான்மை உள்ளதால், அவரது பதவி தப்ப வாய்ப்புகள் அதிகம்.