பிரதமர் இந்திய வருகை ரத்து?

டிச.15-ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு நடைபெற இருந்தது. அசாமில் நிலவும் பதற்றம் போராட்டம் காரணமாக ஜப்பான் பிரதமரின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜான்சனின் கன்சர்வேடிங் கட்சி முன்னிலை எதிர்கட்சி தலைவர் பதவி?

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்ததால் எதிர்கட்சி தலைவர் பதவியை ஜெர்மி கோர்பைன் ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிங் கட்சி முன்னிலையில் உள்ளது.
எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்

ஜிஎஸ்டி உயர்வு?

எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு உயர்த்தலாம் என்று அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. தற்போது ஜிஎஸ்டி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 பிரிவாக உள்ளது. இதில் 5 சதவீத வரியை 6 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில் மத்திய, மாநில அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தியது. இந்த குழு எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி உயர்த்தலாம் என்ற பரிந்துரையை ஆய்வு செய்து, தனது அறிக்கையை, அடுத்த வாரம் 18ம் தேதி கூட உள்ள ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அங்கு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், அப்போது சில பொருட்களுக்கு செஸ் வரி மேலும் உயர்த்துவது, தற்போது 4 பிரிவாக உள்ள ஜிஎஸ்டியை 3 பிரிவாக குறைப்பது குறித்து விவாதிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். அநேகமாக வெள்ளிக்கிழமை அதிகாலை முடிவுகள் தெரிந்துவிடும்..

இந்த தேர்தலில் கன்செர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும் பிரதானமான கட்சிகளான கன்சர்வேடிவ், லேபர் ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது

சபையில் அமளி

சரக்கு, சேவை வரி இழப்பீடு நிலுவை தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்காதது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை அளித்தன. ஆனால் சபை தலைவர் வெங்கையா நாயுடு அவற்றை நிராகரித்தார்

வெங்கையா நாயுடு, இந்த விவகாரத்தை ஏற்கனவே எழுப்பிவிட்டதாகவும், உரிய நேரத்தில் மீண்டும் எழுப்ப வாய்ப்பு தரப்படும் என்றும் கூறினார்.

ஆனால் உறுப்பினர்கள் திருப்தி அடையாமல், கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை காண்பித்து கோஷம் போட்டனர். அதை கண்டித்த சபை தலைவர் வெங்கையா நாயுடு, பூஜ்ய நேரத்தை (கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரம்) நடத்த விரும்பாவிட்டால், சபையை ஒத்திவைப்பேன் என்றார். அதன்பின்னர் சபை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்

குடியுரிமை சட்டதிருத்தம்- டிடிவி தினகரன்

பன்னெடுங்காலமாக இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும்  குடியுரிமை சட்டதிருத்தத்தில் விடுபட்டு இருக்கிறார்கள் என டி டி வி தினகரன் தனது அறிக்கையை பதிவிட்டுள்ளார்   

.

உள்ளாட்சி முதல்கட்ட,இரண்டாம் கட்டதேர்தல் தேதி!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் எந்தெந்த மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது என்பது தொடர்பான விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிரித்து 27 மாவட்டங்களில் உள்ள 312 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி மாவட்டம் வாரியாக முதல் கட்ட தேர்தல் நடைபெறும் ஊராட்சி எது, இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் ஊராட்சி ஒன்றியங்கள் எது என்பது தொடர்பான தகவல் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அரசிதழில் வெளிவந்த விவரம்:வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பாளர்கள் காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு பரிசீலனை 17ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். 19ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். 27 மற்றும் 30ம் தேதி காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குபதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது 

குயின் இணையதள தொடருக்கு தடையா!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக வெளியிட தடைக்கோரிய ஜெ.தீபாவின் மனுவுக்கு டிசம்பர் 11ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் “தலைவி” என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் “குயின்” என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனும் இயக்கி வருகின்றார்

கர்நாடகா இடைத்தேர்தல் வெற்றி! தோல்வி!

கர்நாடகா இடைத்தேர்தலில், 15 தொகுதிகளில் பாஜ 12  தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு  இரண்டு இடங்கள் கிடைத்தன. பாஜக அதிருப்தி சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி  பெற்றார். எதிர்பார்த்ததை விட கூடுதலாக 4 தொகுதிகள் பாஜக வசமாகி இருப்பதால்  முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு இருந்து வந்த ஆபத்து நீங்கி  விட்டது. கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில், அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்த 17 எம்எல்ஏ.க்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 17 பேரில், 15 பேர்  இடைத்தேர்தலில்  போட்டியிடலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில், காலியாக இருந்த 17  தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

நிலுவையில் உள்ள கல்விக்கடன் தள்ளுபடி!

கடந்த 2016-2017 கல்வி ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 3 ஆண்டுகளில், நிலுவையில் உள்ள கல்விக்கடன்களின் தொகை ரூ.67 ஆயிரத்து 685 கோடியே 59 லட்சத்தில் இருந்து ரூ.75 ஆயிரத்து 450 கோடியே 68 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, பொதுத்துறை வங்கிகள் அளித்த புள்ளிவிவரப்படி, கடந்த செப்டம்பர் மாத நிலவரம் ஆகும்.

இவற்றில் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட கணக்குகள், நிலையானவை ஆகும்.

கல்விக்கடன்களை திருப்பிச் செலுத்துமாறு வங்கிகள் அளித்த நிர்ப்பந்தத்தால், எந்த மாணவரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் இல்லை. கல்விக்கடன்களை திரும்ப வசூலிக்க பலவந்த நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று வங்கிகளுக்கு தெரிவித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பதிலளித்துள்ளார்